"பூனைக்குட்டி"வருதா? பாஜகவுக்கு 9 சீட்டா? எடப்பாடிக்கு புது தலைவலி.. களத்தில் தீயாய் பறக்கும் தலைகள்
சென்னை: தமிழக பாஜகவின் தேர்தல் வியூகங்கள் பட்டையை கிளப்பி கொண்டிருக்கின்றன.. இதுகுறித்த சில தகவல்களும் வட்டமடிக்க துவங்கிவிட்டன.
அதிமுக தயவுடன்தான் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் பாஜக உள்ளது.. அதேசமயம், ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்பதையும் உணர்ந்துள்ளது..

எடப்பாடியின் பிடிவாதத்தை, மேலிடம் எப்படி தகர்க்க போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே அமைந்து வருகிறது.. அதேசமயம், அண்ணாமலையுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓரளவு இணக்கமாகிவிட்ட நிலையில், தேர்தல் வேலையும் சூடுபிடித்துள்ளது.
பாஜக தொகுதிகள்: இதில் பாஜகவை பொறுத்தவரை, சில மாதங்களாகவே, களப்பணிகளை செய்து, அதில் தங்களுக்கு செல்வாக்கு மிக்க டாப் 10 தொகுதிகளை லிஸ்ட் போட்டு மேலிடத்துக்கு தந்திருந்தது.. அதன்படி, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, உள்ளிட்ட தொகுதிகளில் பாஜகவே நேரடியாக இறங்கி தேர்தலை சந்திக்கக்கூட வாய்ப்புள்ளதாம்.. இதில் விஷயம் என்னவென்றால், மேற்கண்ட தொகுதிகள் எல்லாமே திமுக, அதிமுக கட்சிகள் செல்வாக்கு பெற்ற தொகுதிகள்தான்..
இப்போதைக்கு கூட்டணி உறுதியாகியிருக்கிறது என்றாலும், தொகுதி மற்றும் சீட் விவகாரங்களில் மீண்டும் பாஜக - அதிமுக இடையே சலசலப்பு எழலாம் என்கிறார்கள்.. அதேசமயம், திமுகவைவிட அதிக அளவிலான வாக்குவங்கி அதிமுகவுக்கு எப்போதுமே தமிழகத்தில் உண்டு என்பதால், இந்த வாக்குகளையும் இழக்க விரும்பாது என்கிறார்கள்.. மேற்கண்ட இடங்களில், நீலகிரி தொகுதிக்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாக தெரிகிறது.
யார் வேட்பாளர்: அதேபோல, ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடவிருப்பதாக தகவல்கள் உலவி வந்தபடியே உள்ளன.. பாஜக சீனியர்களே இந்த தகவலை சொல்லி வந்தாலும், எந்த அளவுக்கு இது உண்மை என்று தெரியவில்லை... அதேபோல, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடலாம் என்று செய்திகள் கசிந்துவருகின்றன..
இந்நிலையில், தமிழக பாஜகவின் களப்பணிகள் வேகமெடுத்துள்ளதாகவும், அதுகுறித்து மேலிடம் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. அதாவது, "லோக்சபா பிரவாஸ் யோஜனா" என்ற எம்பி தேர்தல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.. இதன்மூலமாகத்தான், கடந்த 10 மாதங்களாக, தேசிய அளவில், 161 தொகுதிகள் குறி வைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 9 தொகுதிகள் என்கிறார்கள்.
புதுச்சேரியில் ஒரு தொகுதி, கேரளாவில்3 தொகுதிகளை தேர்வு செய்யப்பட்டு, பணிகளும் துவங்கி நடந்து வருகிறதாம்.. இந்த பணிகளை எல்லாம் வருகிற 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களால், பயன் அடைந்த பயனாளிகளை சந்தித்து, அவர்களை பாஜகவின் ஓட்டு வங்கியாக மாற்ற வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளதாம்.
கன்னியாகுமரி: ஆக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, வேலூர், கோவை, ஈரோடு, தென்சென்னை, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய, 9 இடங்களில் பாஜக மும்முரமாகி உள்ளது.. மத்திய அமைச்சர்கள், 30க்கும் மேற்பட்டடோர், இந்த 9 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய போகிறார்களாம்.. மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலமாக பலனடைந்தவர்கள் யார் யார் என்ற லிஸ்ட் எடுக்கப்பட்டு, பூத் வாரியாக மக்களையும் சந்தித்து, பிரச்சாரத்தை துவங்க போகிறார்களாம்.
இதேபோன்ற ஒரு யுக்தியைதான், கடந்த 10 நாட்களுக்கு முன்பும் தமிழக பாஜக திட்டமிட்டிருந்தது. மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரையை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி என்று ஏற்கனவே அண்ணாமலை யாத்திரை நடத்தி முடித்துள்ளார்.. இந்த பகுதிகளிலெல்லாம், மக்களுடன் நேரடி தொடர்பும் அண்ணாமலைக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதிரடி உத்தரவு: அதனால், இந்த யாத்திரை வெறுமனே, ஒரு பயணமாக முடிந்துவிடாமல், பாதயாத்திரை சென்ற இடங்களிலெல்லாம் கிராமங்களிலேயே பாஜகவினர் தங்கி, மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து, தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
அதுவும் மக்களோடு மக்களாக, பாஜகவினர் கிராமங்களில் தங்கி, இத்தகைய பணிகளை மேற்கொள்ளும்போது, பாஜகவின் கிராஃப் உயருமென்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, அண்ணாமலை சென்றுவந்த யாத்திரை பகுதிகளிலெல்லாம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
செய்த சாதனைகளை சொல்லி பாஜக ஓட்டுக் கேட்காமல், எதிர்க்கட்சிகளை குறை சொல்லியே பிரச்சாரம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதையும் தவிடுபொடியாக்கி பாஜக அடுத்த அதிரடியை துவங்கி உள்ளது.. !!
எம்பி தேர்தல் பணிகளில், மற்ற கட்சிகளைவிட, அதிக மும்முரத்தில் இறங்கி உள்ளது பாஜகதான்.. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே இந்த களப்பணிகள் ஆரம்பமாகிவிட்டன. 400 தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சி தலைவர்கள், ஒரு வருடத்துக்கு முன்பே சூளுரைத்திருந்தனர்..
எடப்பாடி தருவாரா?: இதைத்தவிர, பாஜக ஆளாத மாநிலங்களில், உளவுத்துறையும் இறங்கி ரிப்போர்ட் ஒன்றை தயாரித்ததாம். அந்த ரிப்போர்ட்டின்படி, பாஜகவுக்கு சாதகமான இடங்கள், மற்றும் ஓரளவு சாதகமான இடங்கள் என லிஸ்ட் தரப்பட்டுள்ளது..
அந்த அடிப்படையில்தான், தமிழகத்திலும் 25 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றார்கள்.. முதல்கட்டமாக 9 இடங்களை பலப்படுத்திவிட்டு, அதற்குபிறகு, மற்ற தொகுதிகளில் கவனத்தை செலுத்தவும் முடிவாகி உள்ளதாம். ஆனால், இந்த 9 சீட்டுகளை எடப்பாடி பழனிசாமி தருவாரா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
அவினாசி எல்.முருகன், சாத்தூர் நயினார், பல்லடம் அண்ணாமலை.. கமலாலயத்தில் ரெடியான பாஜக வேட்பாளர் லிஸ்ட் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அவிநாசியில் எல்.முருகன்..சிங்காநல்லூரில் அண்ணாமலை.. நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை..பரபரக்கும் கமலாலயம் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications