Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டமார்".. கிளம்பி அங்கே போறாராமே "தலைவர்".. விக்கித்த மேலிடம்.. ஜி.கே வாசனுக்கு தலையே சுத்திடுச்சாம்

தமாகா தலைவர் வாசனுக்கு, காங்கிரஸ் கட்சியின் கேஎஸ் அழகிரி அழைப்பு விடுக்க காரணம் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக, பாஜகவுக்குள்தான் பஞ்சாயத்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று பார்த்தால், தமிழக காங்கிரஸ் கூடாரமே கதிகலங்கி கிடக்கிறதாம்.. இதுக்கெல்லாம் காரணம் மூத்த தலைவர் கேஎஸ் அழகிரி சொன்ன அந்த ஒரு வார்த்தைதான்.. அது என்னவா இருக்கும்?

விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், தமாகா தலைவர் ஜிகே வாசனை, தங்கள் கட்சிக்குள் கொண்டுவர பாஜக மேலிடம் முயன்று வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி என்ட்ரி தந்திருக்கிறார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அழகிரி, வாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.. ஜிகே வாசன் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினால் அவருக்குக் கீழ்பணியாற்றத் தயாராக இருக்கிறோம்" என்றும் கூறியுள்ளது, கதர்கட்சிக்குள் மிகப்பெரிய குழப்பத்தை தந்துவிட்டது.

வாசன் கூடாரம்

வாசன் கூடாரம்

எதற்காக வாசனை, பிரதமர் மோடி அழைக்கிறார்? அழகிரியும் அழைக்கிறார்? என்பது குறித்து சில தகவல்களும் கசிந்தன.. அதாவது, வாசனுக்கு அமைச்சர் பதவி தருவதன் மூலம், அவரிடம் காரியம் சாதித்துக் கொள்ள தமிழக காங்கிரஸ்காரர்கள் காங்கிரசை விட்டு வெளியேறி வாசனை நோக்கி செல்வார்கள் என்று பாஜக தலைமை கணக்கு போடுகிறது. வாசன் மத்திய அமைச்சராகும் பட்சத்தில் காங்கிரசில் உள்ள அதிருப்தியாளர்கள் வாசனை நோக்கி செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி சென்றால் அது திமுகவுடன் கூட்டணி சீட் ஷேரிங்கில் பார்கையின் பவரை நாம் இழக்க வேண்டியது வரும். இந்த சூழல் உருவாக வேண்டும் என்பதுதான் பாஜக தலைமையின் விருப்பம். அதற்காகத்தான் வாசனுக்கு தூண்டில் வீசுகிறாராம் மோடி.

டோஸ்

டோஸ்

ஆனால், வாசன் பாஜக பக்கம் சென்றுவிட்டால், தமிழக காங்கிரஸ் கூடாரமே காலியாகிவிடும், இதனால், திமுகவிடம் கேட்டு பெறும் சீட் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டு விடும் என்பதால்தான், வாசனை இப்போதே காங்கிரஸ் பக்கம் அழைத்தாராம் அழகிரி.. எனினும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மேலிட காங்கிரஸ், அழகிரியை அழைத்து "டோஸ்" விட்டதாம்.. வாசனை எதுக்காக இங்கே கூப்பிடுகிறீர்கள்? என்றும் கேட்டு கடிந்து கொண்டதாம்.. இப்படியான தகவல்கள் வெளிவரும்நிலையில்தான், இன்னொரு தகவலும் இது தொடர்பாக கசிந்துள்ளது.. அதாவது, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை சொல்லி வரும் நிலையில், தலைவர் பதவியிலிருந்து தன்னை நீக்கினால், தமாகாவில் இணைந்துவிடுவேன் என்று சொல்லி வருகிறாராம் கேஎஸ் அழகிரி.

ஸ்கிரீன்ஷாட்

ஸ்கிரீன்ஷாட்

மேலிடம் தன்னை கூப்பிட்டு கடிந்து கொண்டும்கூட, தன்னுடைய கருத்தில் இப்போதுவரை மாறாமல் இருக்கிறாராம் அழகிரி... அதுமட்டுமல்ல, காங்கிரசுக்கு அழைத்த அழகிரியை சோசியல் மீடியாக்களில் வறுத்து எடுத்து வருகிறார்களாம் கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள்.. இதையெல்லாம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அழகிரியின் கவனத்துக்கு அனுப்பி வைத்தபடி இருக்கிறார்கள் அழகிரியின் ஆட்கள்... அப்போதுகூட அழகிரி, பிடிவாதமாக இருக்கிறாராம்.. நடப்பதையெல்லாம் பார்த்து, வாசனுக்கே குழப்பமாகிவிட்டதாம்.. பாஜக தனக்கு 2 வருட காலமாக அழைப்பு விடுத்து வரும்நிலையில், இப்போது எதுக்காக அழகிரி தன்னை காங்கிரசுக்கு கூப்பிடுகிறார்? தான் வரவில்லை என்றால், தமாகாவில் வந்து சேரப்போவதாகவும் சொல்கிறாரே? என்னவா இருக்கும்? என்று வாசனுக்கே மண்டை காய்ந்துவிட்டதாம்..

மனக்கணக்கு

மனக்கணக்கு

ஆதனால், காங்கிரசுக்கு திரும்ப வேண்டும் என்று தன்னை அழகிரி அழைத்ததன் பின்னணியில் ஏதேனும் விசேசம் இருக்கிறதா? என்று தமாகா மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டாராம் ஜிகே வாசன்.. அந்த மூத்த நிர்வாகியும், காங்கிரசில் உள்ள தன்னுடைய நண்பர்களிடம் விசாரித்து விட்டு தனக்கு கிடைத்த தகவல்களை வாசனிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.. அதாவது, "காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அழகிரிக்கு கல்தா கொடுக்க முடிவாகி விட்டதாம். நாடாளுமன்ற தேர்தல் வரை தனது பதவியை விட்டு வைப்பார்கள், அதனை வைத்து தனக்கு எம்பி சீட் வாங்கிவிடலாம் என மனக்கணக்கில் இருந்துள்ளார் அழகிரி.

லகரங்கள்

லகரங்கள்

ஆனால், சமீபத்தில், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவிக்கு தமிழகத்திலிருந்து நியமிக்கப்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் அழகிரியின் ஆதரவாளர்கள்தான். ஆனால், இந்த பதவிக்காக, ஒவ்வொரு நபரிடமிருந்தும் குறைந்தது 3 லட்சமும் அதிகப்பட்சம் 5 லட்சமும் வசூலித்து அழகிரிக்கு கொடுக்கப்பட்டதாம். அதேபோல, ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வரவேற்பு கொடுப்பதில் இருந்து அவரை ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து பிறகு மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் வரை சில பல லட்சங்கள் செலவானதாம்.

பறிபோன சீட்

பறிபோன சீட்

இதற்காக, எம்பி., எம்எல்ஏ., மாநில நிர்வாகிகள் என பலரிடமும் பல லட்சங்கள் கறக்கப்பட்டிருக்கிறது. அந்த லகரங்களை தங்களின் பாக்கெட்டுகளில் வைத்துக் கொண்டு, கார்கே வந்து போனதற்கான செலவினங்களை கட்சி கணக்கில் எழுதப்பட்டு விட்டதாம். இத்தகைய ஊழல்கள் மேலிடத்துக்கு ப.சிதம்பரம் தரப்பினர் புகாராக தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அழகிரியை பதவியிலிருந்து நீக்க மேலிடம் முடிவு செய்துள்ளது. பதவி பறிபோனால் எம்பி சீட் கிடைப்பதும் அவருக்கு உறுதியில்லை.

கிறுகிறுப்பு

கிறுகிறுப்பு

இதையெல்லாம் கூட்டி கழித்து கணக்குப் போட்டுதான் அழகிரி, பாஜக தலைமையுடன் நீங்கள் இருப்பதும், விரைவில் நீங்கள் (வாசன்) மத்திய அமைச்சர் ஆவீர்கள் என்பதும் தெரிந்து வைத்திருக்கிறார். அதனால், தலைவர் பதவியிலிருந்து அழகிரி நீக்கப்பட்டால் உடனடியாக உங்களை சந்தித்து தமாகாவில் இணைவதற்கு ஆலோசித்துள்ளாராம். அதற்காகத்தான், இப்போதே உங்கள் புகழ் பாட தொடங்கியிருக்கிறார் என்று தனக்கு கிடைத்த தகவலை வாசனிடம் தெரிவித்துள்ளார் அந்த மூத்த நிர்வாகி. எல்லாவற்றையும் கேட்டு, மலைத்து போனாராம் மூத்த தலைவர் மூப்பனாரின் மகன்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+