Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினிகாந்த் "வடக்கில்" தூவிய விதை.. வெளியே வந்த "பூனை".. பாஜகவே எதிர்பார்க்கல.. இவரா இப்படி பேசியது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பூனைக்குட்டி ஒருநாள் வெளியே வரும், அப்ப நான் பதில் சொல்றேன்" என்று மூத்த தலைவர் சொல்லி உள்ளது, மிகுந்த கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் லக்னோ சென்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத்துடன் சேர்ந்து ஜெயிலர் படத்தை பார்த்தார்.-- பிறகு, படத்தின் ஸ்பெஷல் காட்சியை பார்ப்பதற்காக, லதா ரஜினிகாந்தும் அங்கு சென்றிருந்தார்.

Rajnikanth Yogi: What did AIADMK Senior Leader Jayakumar say about Rajinikanth Yogi matter

இதையடுத்து, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டிற்கு சென்றார் ரஜினி.. அங்கு யோகியின் காலைத்தொட்டு வணங்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி, பரபரப்பையும், சலசலப்பையும், சர்ச்சையையும், கிளப்பிவிட்டுள்ளது.

பிரமோஷன்: வழக்கமாக, ரஜினி படம் வெளியாகும்போதெல்லாம், ஏதாவது ஒரு பரபரப்பு, மீடியாவில் வெளியாவது சகஜமான ஒன்று.. ஆனால், இந்த பரபரப்புகள் இயல்பாக அமைவதில்லை.. மாறாக, வெளிவரும் படத்திற்கான புரமோஷனுக்காவே அமைந்து வருவதை, தமிழக மக்களும் கவனித்து கொண்டுதான் வருகிறார்கள்.

இதுஒருபுறம் இருந்தாலும், உபி முதல்வரை சந்தித்து ரஜினி ஏன் பேசினார்? என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.. இது நட்பு ரீதியான ஒரு சந்திப்புதான், இதில் அரசியல் ஏதுமில்லை என்று ரஜினி விளக்கம் தந்தாலும், இந்த விஷயத்தில், அரசியலை தாண்டி எதையும் யோசிக்காமலும் இருக்க முடியவில்லை.

யோகி சந்திப்பு: அப்படியே, நட்பு ரீதியாக ரஜினிகாந்த், முதல்வர் யோகியை சந்தித்தாலும், காலில் ஏன் விழுந்தார்? என்ற கேள்வி வலம்வந்தபடியே உள்ளது.. "ஒரு சந்நியாசியாக இருக்கட்டும், யோகியாக இருக்கட்டும் அவர்கள் நம்மைவிட சின்ன வயதுகொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் நான் செய்தேன்" என்று ரஜினி விளக்கம் தந்தபோதிலும், நம்முடைய ரஜினி இப்படியெல்லாம் விழலாமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இது தொடர்பான விமர்சனங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. காலில் விழுந்ததை ஒப்புக்கொண்டு, அதுகுறித்து ரஜினியே ஒரு விளக்கம் தந்துவிட்ட நிலையில், "யோகி காலில் ரஜினி விழவேயில்லை, குனிந்து வணக்கம்தான் சொன்னார்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.. இப்படி பூசணிக்காயை சோற்றில் மறைத்தவர் வேறு யாருமல்ல, நடிகை ஸ்ரீரெட்டிதான்.

யோகி முதல்வர்: அதேசமயம், இந்த காலில் விழுந்த சம்பவமானது, அரசியல் ரீதியாகவும் எதிரொலித்து கொண்டிருக்கிறது. "யோகி அடுத்த பிரதமராகக்கூடும் என்பதால்தான், காலில் விழுந்துள்ளார். யோகி காலில் விழுந்த ரஜினி, ஏன் மோடியை சந்திக்கவில்லை" என்று உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி உதித்ராஜ் கேள்வி எழுப்பியதுடன், பாஜகவுக்குள்ளேயே ஒரு வெடியை லாவகமாக வீசியிருக்கிறார்

இதேபோல, விசிக தலைவர் திருமாவளவன், "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால், அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியிருந்தால் யோகி அல்லவா முதல்வர் ஆனது போல ஆகியிருக்கும் தமிழ்நாடு. தமிழக மக்கள் எவ்வளவு உயர்ந்த மதிப்பை ரஜினிகாந்த் மீது வைத்திருந்தோம். முதல்வரை சந்திப்பதோ, தலைவர்களை சந்திப்பதோ பிரச்சனை அல்ல. ஆனால் ரஜினி காலடியில் விழுந்து வணங்குகிறார். அதற்கு என்ன பொருள்?

மதிப்பு என்ன: ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தை உயர்வாக மதிக்கட்டும். அது உங்களுக்குள் இருக்கும் உறவு. ஆனால், உங்களைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு உயர்வாய் மதித்துக் கொண்டிருந்தார்கள்..? தனக்கு எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை ரஜினி ஒரே நிகழ்வில் காட்டிவிட்டார்.

இப்படிப்பட்டவர்கள் கைகளில்தான் தமிழ்நாடு இன்று உள்ளது. இவர்கள்தான் கருத்துருவாக்கம் செய்யும் இடங்களில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே நாம் காக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஜெயக்குமார்: இந்நிலையில்தான், அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துகேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்:

"யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. அதில் எங்களுக்கு ஒன்றும் மாறுபட்ட கருத்து கிடையாது.. ஆனால், அப்படி அரசியலுக்கு வருபவர்களை அங்கீகரிப்பது மக்கள்தான்.. ரஜினி மனசுல என்ன இருக்குதுன்னு எனக்கும் தெரியாது.. உங்களுக்கும் தெரியாது.. அது அவருக்கு மட்டுமே தெரியும்.. அதனால், அவங்களை எல்லாம் சந்தித்து பேசியிருக்கிறார் என்றால், எப்படியிருந்தாலும், பூனை ஒருநாள் வெளியே வந்துதானே ஆகும்? அந்த பூனை வெளியே வரும்போது, நான் இதுக்கு பதில் சொல்றேன்" என்கிறார்.

நாலாபக்கமும், ரஜினி குறித்த எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துவரும்நிலையில், ரஜினிக்கு ஆதரவும் பெருகி கொண்டிருக்கிறது.. இதுகுறித்து இணையத்திலும் கருத்துக்கள் விழுந்து கொண்டிருக்கின்றன.

பிரச்சாரமா?: இதனிடையே, "உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத்தின் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதில் எந்த தவறும் இல்லை... யோகி ஆதித்யநாத் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்திருந்தால் நல்லாட்சியாக அமைந்திருக்கும். வேலையில்லாத அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் குறித்து தேவையில்லாத கருத்துக்கள் கூறுகின்றன" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கும் நிலையில், ரஜினியின் பங்கு பாஜகவில் இனி தேவையாக இருக்கும் என்கிறார்கள் அரசிய விமர்சகர்கள்.

காரணம், 4 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேசம் அறிந்த பிரபலமான, ரஜினியின் பிரச்சாரம் தேவையாக இருக்கலாம் என்றும், கடந்த முறை தேர்தலின்போதே இந்த ஐடியாவை பாஜக முன்னெடுத்தும் பலன்தராத நிலையில், இந்த முறை தேர்தலுக்கு ரஜினியின் ஆதரவை பாஜக நிச்சயம் பெற்றுவிடும் என்கிறார்கள்.

ராமசாமி மண்: "இதெல்லாம் தனிமனித விருப்பம்.. பிழைப்புக்காக பேரன் வயதில் உள்ளவர்கள் காலில் கூட விழ தயங்காதவர்கள், இதையெல்லாம் விமர்சிக்க கூடாது.. காலில் விழுந்தவர் ஆன்மீகவாதி. அவரை ஆசிர்வதித்தவர் பீடாதிபதி.. இதில் அரசியல், சினிமா என்பதற்கெல்லாம் இடமில்லை.. ராமசாமி மண்ணில் யார் காலில் யார் விழவேண்டும் என்று எதாவது வரைமுறை இருக்கிறதா என்ன? ரஜினி யாருக்காகவும், எதற்காகவும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை?" என்று ஆதரவுக்குரல்களும் எழாமல் இல்லை.

எனினும், "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என்கிறார் திருமாவளவன்.. "பூனைக்குட்டி ஒருநாள் வெளியே வரும்" என்கிறார் ஜெயக்குமார்.. அப்படியானால், நிஜமாகவே பூனைக்குட்டி இருக்கிறதா? அது மாயமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

பிரச்சாரமா?: இதனிடையே, "உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத்தின் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதில் எந்த தவறும் இல்லை... யோகி ஆதித்யநாத் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்திருந்தால் நல்லாட்சியாக அமைந்திருக்கும். வேலையில்லாத அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் குறித்து தேவையில்லாத கருத்துக்கள் கூறுகின்றன" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கும் நிலையில், ரஜினியின் பங்கு பாஜகவில் இனி தேவையாக இருக்கும் என்கிறார்கள் அரசிய விமர்சகர்கள்.

காரணம், 4 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேசம் அறிந்த பிரபலமான, ரஜினியின் பிரச்சாரம் தேவையாக இருக்கலாம் என்றும், கடந்த முறை தேர்தலின்போதே இந்த ஐடியாவை பாஜக முன்னெடுத்தும் பலன்தராத நிலையில், இந்த முறை தேர்தலுக்கு ரஜினியின் ஆதரவை பாஜக நிச்சயம் பெற்றுவிடும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+