Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மூன்று முடிச்சு".. பட்ட பாடெல்லாம் போச்சோ.. "கிழக்கே" பாயும் அம்புகள்.. சிக்கலில் எடப்பாடி பழனிசாமி?

எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி, நடக்க போகும் இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார் என்கிறார்கள்.. இதற்காக 3 விதமான சிக்கல்களையும், சவால்களையும் எடப்பாடி எதிர்கொள்ள நேரிடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க போகிறது.. இங்கு போட்டியிடுவதில், திமுக கூட்டணியைவிட, அதிமுக கூட்டணியிலேயே நிறைய குழப்பங்கள் நிலவின..

அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ளதால், எப்படியும் கூட்டணி கட்சியான தமாகாவுக்கு, ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது..

ஜாக்ரதை

ஜாக்ரதை

ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜிகே வாசன, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை தமாகா ஏற்றுக் கொண்டது என்று அறிவித்துவிட்டார்.. அதிமுகவே ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்க போகிறது.. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய நெருக்கடி வர வாய்ப்புள்ளதாகவும், மிக ஜாக்கிரதையான காய்நகர்த்தல்கள் மட்டுமே அதிமுகவில் இப்போது தேவை என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

பதிலடி

பதிலடி

எனினும் எடப்பாடி பழனிசாமி இதை எப்படி கையாள போகிறார்? பதிலுக்கு ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? பாஜக என்ன முடிவில் உள்ளது? என்பதெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்து வருகிறது.. எடப்பாடியை பொறுத்தவரை, இந்த விஷயத்தை 3 விதமாக அணுக வேண்டி உள்ளது.. ஒன்று, பாஜகவை எதிர்கொள்வது, இரண்டாவதாக, திமுகவை எதிர்கொள்வது, மூன்றாவதாக, ஓபிஎஸ்ஸை எதிர்கொள்வது என்ற முக்கோண சிக்கலை சமாளிக்க வேண்டியதாக இருக்கும் என்று தெரிகிறது.. பாஜகவை பொறுத்தவரை, இந்த முறை இடைத்தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..

 வெளுத்தாச்சு

வெளுத்தாச்சு

ஆரம்பத்தில் இடைத்தேர்தலில் பெரிதாக பாஜகவுக்கு நாட்டம் இல்லாத நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்ட பிறகு, போட்டியிடுவதில் முனைப்பு காட்டுவதாக தெரிகிறது. அதிமுகவுடன் ஏற்கனவே இணக்கமான சூழல் நிலவாத நிலையில், பாஜக களமிறங்குவது உறுதியாகிவிட்டால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியை பாஜக எதிர்க்கிறது என்ற முடிவுக்கே வரக்கூடும் என்கிறார்கள்.. "எம்பி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்" என்று எடப்பாடி டீமின் மூத்த தலைவர்களே குரல் எழுப்பி வரும்நிலையில், பாஜக Vs அதிமுக போட்டி சூழல், ஈரோடு கிழக்கு தொகுதியிலேயே வெடிக்க நேர்வதுடன், திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களும் பிரிய நிறையவே வாய்ப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்படுகிறது.

 செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இடைத்தேர்தல் என்றாலே, ஆளும் தரப்பே பெரும்பாலும் வெற்றி பெறுவது இயல்பான ஒன்றுதான். ஆனாலும், இந்த முறை திமுக கூட்டணி எதிர்பாராத அளவுக்கு வலுவாகவே உள்ளது.. போதாக்குறைக்கு கொங்குவின் பொறுப்பு செந்தில்பாலாஜியிடம் உள்ள நிலையில், திமுக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி சமாளிப்பது சவாலான காரியம் என்கிறார்கள்.. தாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி என்று பாஜக தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், ஆளும்தரப்பின் அதிருப்தி ஓட்டுக்களை பாஜகவே அறுவடை செய்ய நேர்ந்தால், இதுவும் எடப்பாடிக்கு சிக்கலை உண்டுபண்ணுமாம். சுருக்கமாக சொல்லப்போனால், தமிழகத்தின் எதிர்க்கட்சி என்பதை நிரூபிக்க, திமுகவை மட்டுமல்லாமல் பாஜகவையும் வெல்ல வேண்டிய கட்டாயமும், நிர்ப்பந்தமும் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளதாகவே சொல்கிறார்கள்.

முதலியார்

முதலியார்

ஓபிஸ்ஸை பொறுத்தவரை இந்த தேர்தலில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறார் என்பது உறுதியாக தெரியவில்லை.. ஆனால், ஓபிஎஸ்ஸிடம் அவரது ஆதரவாளர்கள் ஒருசில கருத்துக்களை எடுத்து சொல்லி வருகிறார்களாம்.. "யுவராஜா போட்டியிட நேர்ந்தால், ஆதரவை மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிவிடுவோம்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை நிறுத்தினால், அதற்கு மாற்றாக, நாமளும் வேட்பாளரை நிறுத்தியே ஆக வேண்டும், போட்டியிடாமல் போனால், நம்மை பலவீனமாக நினைத்துவிடுவார்கள்" என்றார்களாம்.. இப்போது கூட்டணிக்கு ஒதுக்காமல் அதிமுகவே களமிறங்குவதால், ஓபிஎஸ்ஸின் முடிவு எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.

 கிளம்பிய டவுட்

கிளம்பிய டவுட்

ஒருவேளை ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினால், அவரும் அதிமுக வேட்பாளராகவே கருதப்படுவார்.. இதுவும் எடப்பாடிக்கு தலைவலியை உண்டுபண்ண வாய்ப்புள்ளதாம்.. எல்லாவற்றுக்கும் மேலாக, இலை கிடைக்காத நிலையில், புது சின்னத்தில் போட்டியிட நேரும்போது, அதிமுக வாக்காளர்களை போதுமான அளவுக்கு கவருமா? என்பதும் சந்தேகம்தானாம்.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் தரப்பு, புது ஐடியா ஒன்றை கையில் எடுத்துள்ளதாம்.. கவுண்டர் சமுதாயம் அல்லாத ஒரு வேட்பாளரை அதாவது "முதலியார்" வேட்பாளர் ஒருவரை, இடைத்தேர்தலில் முன்னிறுத்தலாமா என்று யோசித்து வருகிறார்களாம்..

 ராமலிங்கம் சாய்ஸ்

ராமலிங்கம் சாய்ஸ்

காரணம், கொங்கு சமுதாய ஓட்டுக்கள் என்பது எடப்பாடிக்கு கிட்டத்தட்ட 12 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், பிற சமூகத்தினரின் வாக்குகளை பெற்று, வெற்றியை சுபலமாக்கிவிடலாம் என்பதே ஓபிஎஸ் தரப்பின் கணக்காக உள்ளதாம். அந்தவகையில், முதலியார் சமுதாய வேட்பாளரை ஓபிஎஸ் டீம், இறக்கும்பட்சத்தில், அதுவும் எடப்பாடிக்கு தலைவலியையே உண்டுபண்ணக்கூடும் என்கிறார்கள். இப்போதைக்கு மூத்த தலைவர் கேவி ராமலிங்கத்தை தன்னுடைய சாய்ஸாக எடப்பாடி வைத்துள்ளதாக ஒரு பேச்சு உள்ளது..

 முக்கோண இடி

முக்கோண இடி

கட்சியில் ராமலிங்கம் சீனியர் என்றாலும்கூட, ஈரோடு மேற்கு தொகுதியில் பெருத்த செல்வாக்கையும் பெற்றிருப்பவர் என்றாலும்கூட, ஈரோடு கிழக்கில் அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இல்லை என்கிறார்கள்.. எனினும், கேவி ராமலிங்கத்தையே முன்னிறுத்தவே எடப்பாடி முடிவெடுப்பதாக தெரிகிறது.. ஆக, திமுக + பாஜக + ஓபிஎஸ் என எல்லா பக்கமும் நெருக்கடிகள் ஏற்பட உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலை எப்படி சந்திக்க போகிறார்? அதுவும் சின்னம் இல்லாமல் எப்படி சமாளிக்க போகிறார்? திமுக, பாஜகவுக்கு என்ன பதிலடி தரப்போகிறார்? என்பதெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளது.. பார்ப்போம்..!!

குலுங்கும் சென்னை

குலுங்கும் சென்னை

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடுவதால் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.. இது தொடர்பாக ஈரோடு மாநகர மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக ஓபிஎஸ் தரப்பில் தேர்வு செய்யப்படும் வேட்பாளர், முதலியார் சமூக வேட்பாளராக இருக்க நிறைய சான்ஸ் இருப்பதாக சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்ஸுக்கு தன் பக்கம் பெரும்பாலான ஆதரவு இல்லாவிட்டாலும்கூட, டிடிவி தினகரன், சசிகலா, பாஜக தரப்பில் ஆதரவுகள் அளிக்கப்படலாம் என்றும் சலசலக்கப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+