"செம ட்விஸ்ட்".. திடீர்னு "அவர்" வீட்டுக்குள் நுழைந்த அண்ணாமலை.. கே.டி.ராகவனுக்கு ஒரே சிரிப்பு.. அடடே
சென்னை: பாஜகவின் மூத்த தலைவர் கே.டி.ராகவன் வீட்டிற்கு அண்ணாமலை சென்றுள்ளார்.. இதுகுறித்த போட்டோக்கள் ஒருபக்கம் வைரலாகி கொண்டிருந்தாலும், இதை சுற்றி சில விஷயங்களும் கசிந்து கொண்டிருக்கின்றன.. என்ன நடக்கிறது பாஜகவில்?
கேடி ராகவன் - முன்னாள் பாஜக மாநில தலைவர்.. கட்சியின் சீனியர்.. நீண்ட காலமாகவே கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர்.. முக்கியமாக, பாஜகவின் மாநில தலைவருக்கான தேர்வு நடக்கும்போதெல்லாம் ராகவன் பெயரும் வந்துவிட்டு போகும்.. ஆனாலும், அவருக்கான தலைமை பதவி கடைசிவரை கிடைக்கவில்லை.

அதேசமயம், டெல்லி மேலிடத்துக்கு ஸ்ரைட்டாக போனை போட்டும் பேசும் அளவுக்கு கட்சியில் செல்வாக்கு பெற்றவர்.. இவர் பங்கு பெறும் தொலைக்காட்சி விவாதங்களில் இவருக்கு என்று தனி மரியாதை உண்டு.
பரபர வீடியோ: இந்நிலையில்தான், திடீரென அன்று விடிகாலை, அந்த வீடியோ வெளியானது.. பூஜை அறையில், அரை நிர்வாண கோலத்தில், பெண் ஒருவருடன் வீடியோகாலில் ஆபாச செய்கையுடன் வெளியான காட்சி, இணையத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.. அதிலும் கமலாலயம் சற்று நடுங்கித்தான் போனது.. யூடியூபர் மதன் இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்பட்டது.இதையடுத்து, கே.டி.ராகவன் பாஜகவில் இருந்தும் விலகினார்...
விளக்கம்: முன்னதாக, ஒரு விளக்கமும் தந்திருந்தார்.. அதில், தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யாரென்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்தவிதப் பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். என்னைப் பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்துவதற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது... என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன், சட்டப்படி சந்திப்பேன், தர்மம் வெல்லும்" என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு பிறகு, லைம்லைட்டில் இருந்து விலகி உள்ளார்.. பேட்டிகள், விவாதங்கள் எதிலுமே கலந்து கொள்வதில்லை.. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகவன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.. இந்நிலையில், தன்னுடைய வீட்டு கிரகப்பிரவேசத்தை நடத்தியுள்ளார் ராகவன்.. தன்னுடைய வீட்டு கிரகபிரவேசத்திற்கு வந்து சிறப்பிக்குமாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ராகவன் அழைப்பு விடுத்திருந்தாராம்..
என்ன காரணம்: ஆனால், ராகவனின் இந்த அழைப்பை அண்ணாமலை ஏற்க மாட்டார் என்றே பாஜக வட்டாரங்கள் கருதின.. பிறகு யாருமே எதிர்பாராத வகையில், அண்ணாமலை ராகவன் வீட்டில் ஆஜரானது, பலருக்கும் ஆச்சரியத்தை கிளப்பியது.
புதிய இல்லத்திற்கு நேரடியாகவே சென்ற அண்ணாமலை, ராகவன் குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். ராகவனிடம் தனிப்பட்ட முறையிலும் பேசியிருக்கிறார்.. ஆனால், இவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.. ராகவன் வீட்டுக்கு சென்ற போட்டோக்களை எல்லாம் அண்ணமலை ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார்..
ரீ என்ட்ரி: அந்த போட்டோவில் ராகவன் பூரித்து காணப்படுகிறார்.. வெற்று உடம்பில், பட்டு வேட்டி, சந்தனம், குங்குமம், மாலை என பளிச்சென காணப்படுகிறார் ராகவன்.. அவரது முகத்தில் புத்துணர்ச்சி தென்படுகிறது.. இந்த நிகழ்வில் மேலும் சில பாஜக புள்ளிகள் கலந்து கொண்டுள்ளனர்.. இந்த போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. மற்றொருபக்கம், இந்த சந்திப்புக்கு வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது..
அதாவது விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது. தமிழகத்தில் குறைந்தது 10 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக செயல்பட்டும் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ராகவன் போன்ற சீனியர்கள் கட்சிக்குள் இருந்தால், அது மேலும் நன்மை பயக்கும் என்று தலைமை நம்புகிறதாம்.. மேலும் அண்ணாமலைக்கு எதிராக சிலர் கட்சிக்குள்ளேயே காய்நகர்த்தி வருவதாலும், எதிராக அணி திரட்டி கொண்டிருப்பதாலும், நம்பகமான ஒருவர் அண்ணாமலைக்கு தற்சமயம் தேவையாக இருக்கிறாராம்..

காய் நகர்த்தல்: மேலும், தனக்கு சாதகமாக டெல்லி மேலிடத்தில் பேசவும், தகவல்களை பரிமாறவும் ராகவன் போன்ற சீனியர்கள் தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அண்ணாமலை தரப்பு நினைக்கிறதாம்.. அதனால், மறுபடியும் பாஜகவுக்குள் ரீ-என்ட்ரி கொடுப்பதற்கான சிக்னல்தான் இந்த கிரகப்பிரவேச நிகழ்வு என்கிறார்கள் கமலாலய வட்டாரங்கள்.. என்னதான் நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications