உடனே சரி செய்யணும்.. ஒரே கல்லில் 2 மாங்காய்.. காலையிலேயே வண்டியை விட்ட ஸ்டாலின்.. "போகஸ்" சவுத்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீண்ட மாதங்களுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் தென் மண்டல பயணம் திமுகவினர் இடையே கவனம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் நடக்க உள்ள பாரத் ஜோடோ யாத்திரை இன்று தொடங்க உள்ளது. யாத்திரையை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செய்தார்.

இந்த யாத்திரை மிகவும் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சியை மீட்டு எடுக்கும், மீண்டும் தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சியை கவனம் பெற வைக்கும் யாத்திரையாக இது பார்க்கப்படுகிறது.

3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது.

யாத்திரை

யாத்திரை

இந்த யாத்திரையை முதல்வர் ஸ்டாலின்தான் துவங்கி வைக்க உள்ளார். இன்று கன்னியாகுமரி செல்லும் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் மாலை 4.30 மணிக்கு தேசிய கொடியை கொடுத்து யாத்திரையை தொடங்கி வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின்தான் ராகுலிடம் தேசிய கொடியை கொடுப்பார். அதன்பின் 5 மணிக்கு யாத்திரை தொடங்கும். காங்கிரஸ் - திமுக இடையே கடந்த சில நாட்களாக உரசல் உள்ளது, பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டுகிறது என்றெல்லாம் வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

 திட்டம் என்ன?

திட்டம் என்ன?

இந்த நிகழ்ச்சியோடு முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு திரும்பி வரும் திட்டத்தில் இல்லை. மாறாக 3 நாட்கள் தென் மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று பிற்பகல் தூத்துக்குடி செல்லும் முதல்வர் அங்கிருந்து கன்னியாகுமரி செல்ல உள்ளார். அதன்பின் மாலை கிளம்பி திருநெல்வேலி செல்ல இருக்கிறார். இன்று இரவு திருநெல்வேலியில் திமுக நிர்வாகிகளுடன் சில ஆலோசனை செய்ய உள்ளார். நாளை அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

 நெல்லை

நெல்லை

நெல்லையில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதன்பின் மதுரைக்கு புறப்படும் முதல்வர் ஸ்டாலின் இடையில் விருதுநகரில் திமுக நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். அங்கேயே மதிய உணவும் சாப்பிட உள்ளார். இதன்பின் மதுரையில் அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இதில் பல திமுக அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை

மதுரை

முதல்வர் ஸ்டாலின் இந்த நெல்லை மற்றும் மதுரை பயணத்தில் பல திமுக தலைவர்களை மாவட்ட செயலாளர்களை சந்திக்க உள்ளார். கடந்த சில மாதங்களாக முதல்வர் ஸ்டாலின் தென் மண்டலங்களுக்கு செல்லவே இல்லை. கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலா பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி சென்றார். ஆனால் தென் மண்டலத்தில் திமுக ஏற்கனவே வலிமையாக உள்ளது. அங்கு திமுக சார்பாக அமைச்சர்களும் உள்ளனர்.

கொங்கு

கொங்கு

இதனால் முதல்வர் ஸ்டாலின் கோவையில் செலுத்திய அளவிற்கு கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாகவே முதல்வர் ஸ்டாலின் தற்போது மதுரை, நெல்லை செல்கிறார். தென் மண்டலத்தில் சில மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் இடையே உரசல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் உட்கட்சி தேர்தல் காரணமாக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் , மாவட்ட மறுசீரமைப்பு விரைவில் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சில உட்கட்சி மோதல்கள் அங்கே நிலவி வருகின்றன.

போகஸ் சவுத்

போகஸ் சவுத்

இந்த உரசல்களை சரி செய்ய வேண்டும் என்றுதான் முதல்வர் ஸ்டாலின் இந்த தென் மண்டல பயணத்தை மேற்கொள்கிறார். அதோடு அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட பின் முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் மதுரை பயணம் இது. மதுரையில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் பற்றியும் ஸ்டாலின் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடனும் உறவை புதுப்பிக்க முடியும், தென் மண்டல திமுகவில் கவனம் செலுத்த முடியும் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்கும் வகையில் இந்த குமரி பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+