நீயெல்லாம் ஒரு ப்ரோபஸரா? மேடையிலேயே நொந்து கொண்ட பொன்முடி.. வாத்தியாராக பாடமெடுத்த அமைச்சர்
சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திடீரென்று மேடையில் வாத்தியாராக மாறி மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடம் கேள்வி கேட்டார். இந்த வேளையில் யூனிட்டரி ஸ்டேட் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பாண்டிச்சேரி என பதிலளித்த ப்ரோபஸரை பார்த்து அமைச்சர் பொன்முடி நொந்து கொண்டு விமர்சனம் செய்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உலக அரசியலமைப்பு நாள் நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.

இதில் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது அவர் மாணவர்களிடம் கேள்விகள் கேட்டார்.
அப்போது Unitary State என்றால் என்ன? என்று மாணவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அப்போது மாணவர்கள் அமைதியாக இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொன்முடி, ‛‛ஒற்றை ஆட்சி'' என்று விளக்கம் கொடுத்ததோடு, ‛‛என்னயா Political Science படிக்கும் மாணவர்களுக்கு இதுகூட தெரியாதய்யா? Unitary State என்பதை இன்னுமா படிக்காமல் இருக்கிறீங்க? Unitary State என்ன என்று சொல்லி கொடுத்து இருக்காங்களா? அது எங்கு இருக்கு? யாராவது ஒருத்தர் பதில் சொல்லுங்க? என கேட்டார்.
அதற்கு மாணவர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. இதனால் அமைச்சர் பொன்முடி கடும் அதிருப்தி அடைந்தார். மேலும், ‛‛பதில் சொல்லுங்கப்பா.. வாத்தியாரா இருந்ததால் கேள்வி கேட்க தோணுது.. பதில் சொன்னால் தான் நீங்க என்ன படிக்கிறீங்கனு என்னால் தெரிந்து கொள்ள முடியும். சொல்லுங்க Unitary State எங்கு இருக்கு? என்று மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் ‛இந்தியாவில் இருக்கு'' என்றனர். அதை கேட்டு முகம் மாறிய அமைச்சர் பொன்முடி, ‛‛என்னது இந்தியாவில் இருக்கா? தெரியாதா? சரி வாத்தியார் யாருங்களாவது சொல்லுங்கள்'' என்றார்.
அப்போது அமைச்சர் பொன்முடிக்கு பின்புறம் மேடையில் இருந்த பேராசிரியர் ஒருவர், ‛புதுச்சேரி’ என்று பதிலளித்தார். இதை கேட்டு திரும்பிய பொன்முடி, ‛‛அட நீ வேற.. நீயெல்லாம் ஒரு ப்ரோபஸரா?’’ என சிரித்தபடி கூறி நொந்து கொண்டார். அதன்பிறகு அவர் விளக்கம் அளித்தார். ‛‛Unitary State என்பது இங்கிலாந்து. இங்கிலாந்து தான் Unitary State.
இது கூட தெரியாமல் என்ன பாலிட்டிக்ஸ் படிக்கிறீங்க.. அய்யோ.. பாண்டிச்சேரினு சொல்றாங்க.. அது இந்தியாவில் இருக்கிற யூனியன் ஸ்டேட்.. அது யூனிட்டரி ஸ்டேட் இல்லை. முதலில் வாத்தியார் எல்லாருக்கும் டிரெய்னிங் கொடுக்க வேண்டும். நான் அப்போ படித்தது. இப்போது சொல்கிறேன். நான் வாத்தியாரா இருப்பதற்கு முன்பு படித்தது. யூனிட்டரி ஸ்டேட் என்றால் ஒற்றை ஆட்சி முறையை கொண்ட மத்திய அரசாங்கம். அதன் கீழ் மாநிலங்கள் எதுவும் இருக்காது. மத்திய அரசு மட்டுமே இருக்கும். அதன் கீழ் உள்ளாட்சி துறைகள் இருக்கும்'' என்றார். அமைச்சர் பொன்முடி அரசியலுக்குள் வருவதற்கு முன்பு அவர் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications