நாளை சென்னையில் இருந்து சொந்த ஊர் போக போறீங்களா.. இத நோட் பண்ணிக்கோங்க
சென்னை: தைப்பூசம், குடியரசு தின விழா, சனி மற்றும் ஞாயிறு என அடுத்தடுத்து நான்கு நாட்கள் விடுமுறையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோர்.. இதை எல்லாம் நோட் பண்ணிக்கங்க.. கண்டிப்பாக உங்களுக்கு உதவும்.
குடியரசு தின விடுமுறையை கொண்டாட நாளை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல போகிறீர்கள் என்றால், கண்டிப்பாக ஆம்னி பேருந்திலோ அரசு பேருந்திலோ முன்பதிவு செய்திருப்பீர்கள். ஆம்னி பேருந்துகளில் செல்வதாக இருந்தால் கோயம்பேட்டில் இருந்தே கிளம்பி வரும். வரும் வழியில் உள்ள வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் என ஏறி வரலாம். ஆனால் திரும்பவும் சென்னை திரும்பும் போது கிளாம்பாக்கத்தில் இறங்கி மாறி செல்லும் வகையில் நிலை வரலாம்.

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் என்றால், கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்பட்டு செல்லும் என்பதால் அதற்கு தயாராக முன்கூட்டியே செல்லுங்கள். ஒருவேளை நீங்கள் ரயிலில் செல்கிறீர்கள் என்றால் ஊரப்பாக்கம் அல்லது வண்டலூர் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ஆட்டோவிலோ பேருந்திலோ ஏறி கிளாம்பாக்கம் வந்து அங்கிருந்து எளிதாக அரசு பேருந்தில் பயணிக்க முடியும். அதேநேரம் கடைசி நேரத்தில் பயணிப்போருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து புறப்படும் என்பதை தெளிவாக அறிந்து பயணியுங்கள்.
பொங்கல் சமயத்தில் சிறப்பு பேருந்துகள் (முன்பதிவு இல்லா பேருந்துகள்) கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டது. இதை அறியாத பலரும் நேராக கிளாம்பாக்கம் சென்றனர். இதனால் பரிதவித்து போனார்கள். எனவே இந்த முறை அப்படியான நிகழ்வுகளுக்கு இடம் அளிக்காமல் போக்குவரத்து கழகங்களில் தெளிவாக விசாரித்து கிளாம்பாக்கமா அல்லது கோயம்பேடா அல்லது எந்த பேருந்து நிலையம் என்பதை தெளிவாக அறிந்து அதற்கு தகுந்தாற்போல் புறப்பட்டு செல்லுங்கள்.
தைபூசம் (பழநி), பௌர்ணமி (திருவண்ணாமலை கிரிவலம்), குடியரசு தின விழா மற்றும் வார விடுமுறை நாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால், பயணிகள் தேவைக்கு ஏற்ப 25.012024 (வியாழக்கிழமை) முதல் 28.01.2024 (ஞாயிற்றுக்கிழமை) வரை பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும். அதை அறிந்து பயணத்தை முடிவு செய்யலாம். சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் எவ்வளவு இயக்கப்படும். எங்கிருந்து இயக்கப்படும் என்பது குறித்து அறிவிப்புகள் இதுவரை வரவில்லை..
இதேபோல் தைப்பூசம் மற்றும் குடியரசு தின விடுமுறையை கொண்டாட சொந்த வாகனங்களில் செல்கிறீர்கள் என்றால், நாளை மாலை கண்டிப்பாக கடுமையான போக்குவரத்து நெரிசல் சென்னை முழுவதுமே இருக்கும். எனவே அதற்கு தகுந்தாற்போல் முடிவு செய்து கிளம்புங்கள். பொதுவாக பகல் நேரங்களில், மதிய நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் என்பதால் அதன்படி கிளம்பி செல்லுங்கள். தாம்பரம் முதல் பரனூர் சுங்கச்சாவடி வரை நாளை இரவு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம் வியாழக்கிழமை அதிகாலை நேரங்களில் மற்றும் காலை நேரங்களில் நெரிசல் குறைவாக இருக்கும் அப்போது பயணத்தை திட்டமிடுவது எளிதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications