பரனூர் சுங்கச்சாவடி வழியாக சொந்த ஊருக்கு போறீங்களா சென்னை மக்களே.. இதை பார்த்துட்டு போங்க
சென்னை: சென்னையில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல பலரும் தயாராகி வருகிறார்கள்.. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி வழியாக போகிறவர்கள் இதை எல்லாம் நோட் பண்ணுங்க.
தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் நாளை மறுநாள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. ஞாயிறு அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இன்றும் நாளையும் பலரும் சொந்த ஊருக்கு செல்வார்கள். சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரும் இன்று தான் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள. குறிப்பாக இன்று மாலை பள்ளி முடிந்ததும் பலரும் பேருந்து கார், அல்லது சொந்த வாகனங்களில் ஊருக்கு செல்கிறார்கள்.

சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருச்சி என தென் மாவட்டங்களுக்கு செல்வோர் பரனூர் சுங்கச்சாவடியை தாண்டித்தான் செல்ல வேண்டும். இதேபோல் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை கடந்தே பெரும்பாலான வாகனங்கள் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட 90 சதவீதம் சென்னைவாசிகள் பரனூர் சுங்கச்சாவடியை கடந்து தான் சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.
பொதுவாக தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். குறிப்பாக பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.. இந்த முறை போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்றாலும்,, ஆம்னி பேருந்துகள் எல்லாம் நேராக நசரத்பேட்டை ரோட்டை பிடித்து கிளாம்பாக்கம் செல்வதால் கொஞ்சம் ஆறுதலாக விஷயமாக உள்ளது. அதேநேரம் கிளாம்பாக்கத்தில் இருந்து பரனூர் வரை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வாகன பெருக்கம் இருக்கும் என்பதால் கவனமாக செல்ல வேண்டும்.
பரனூர் சுங்கச்சாவடியை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய மக்கள் இன்றும் மற்றும் நாளையும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை கடந்து பயணம் மேற்கொள்வார்கள். இந்த சமயத்தில் நெரிசல் அதிகமாக இருக்கும். சொந்தமாக கார் மற்றும் வேன் ஆட்டோ மூலமாக பயணம் செய்பவர்கள் அதிகாலை இரண்டு மணி முதல் காலை 6 மணிக்கு தென் மாவட்டத்தை நோக்கி சென்றால் பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல் இல்லாமல் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
இதேபோல் தங்களது கார் மற்றும் பேன் லாரிகளில் வருபவர்கள் (fastag) ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவது நல்லது.. அங்கு வந்து கணக்கில் பணம் இல்லை என்றால் கையில் பணம் கொடுத்து சுங்கவரி வாங்க வேண்டிய நிலை ஏற்படுடும். இதனால் அடுத்தடுத்து வாகனங்கள் சுங்க சாவடியை எளிதில் கலக்க முடியாமல் நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து பரனூர் சுங்கச்சாவடி வழியாக போகாமல் மாற்றுப்பாதையில் போக வேண்டும் என்று விரும்பினால், கூடுவாஞ்சேரியில் இருந்து பிரிந்து நேராக செங்கல்பட்டு நகருக்கு வந்து தான் போக முடியும்.. கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் சுற்றித்தான் போக வேண்டும். இதை தாண்டி வேறு வழிகள் இல்லை.. அப்படி செல்வதாக இருந்தால் பல கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இசிஆர் ஓஎம்ஆர் சாலையில் செங்கல்பட்டு வருவோரும் கேளம்பாக்கத்தில் இருந்த கிளாம்பாக்கம் வந்து இணைந்து விடுவார்கள் என்பதால் கிளாம்பாக்கத்தில் இருந்து நெரிசல் இருக்கவே செய்யும்.. அதிகாலை நேரங்களில் சென்றால் தான் பரனூரை கடந்து எளிதாக போக முடியும்.












Click it and Unblock the Notifications