இன்னும் 4 நாட்களில் வருமான வரி ரிட்டர்ன்.. சம்பளதாரர்களுக்கு மத்திய அரசு வைத்த ஆப்பு.. நோட் பண்ணுங்க
சென்னை: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான நேரம் தொடங்க உள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் இதற்கான அவகாசம் தொடங்கும். தனி நபர் வருமான வரி, நிறுவன வருமான வரி ஆகிவற்றிற்கு ரிட்டர்ன் தாக்கல் செய்ய முடியும். ஆனால் இதில் முக்கியமான செக் ஒன்றை வைக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி இந்த முறை வருமான வரித்துறை கடுமையான சில சோதனைகளை மேற்கொள்ள உள்ளது.

1. வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கடந்த வருடம் தாக்கல் செய்த ஆவணத்தோடு ஒப்பிட்டு செய்து தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் சிக்கல்.
2. ஏனென்றால் வருமான வரி தாக்கல் செய்த முந்தைய ஆண்டு விவரங்களையும் நிதி அமைச்சகம் இந்த முறை சோதிக்கும்.
3. நீங்கள் சென்ற வருடம் ஒரு முதலீடு இருந்ததாக கூறி இருப்பீர்கள். ஒரு பீரிமியம் செலுத்தியதாக கூறி இருப்பீர்கள். இந்த வருடம் அதை கூடுதலாக கூட கணக்கு காட்டி இருப்பீர்கள்.
4. அதிக refund வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் நீங்கள் செய்திருக்க வாய்ப்புகள் உள்ளன. அதை எல்லாம் சோதனை செய்ய உள்ளனர். நீங்கள் தாக்கல் செய்யும் வருமான வரியை மட்டும் சோதனை செய்யாமல் அதை கடந்த வருடத்தோடு ஒப்பீடு செய்ய உள்ளனர்.
5. முக்கியமாக வீட்டு வாடகையை வைத்து வருமான வரி விலக்கு பெரும் நபர்கள்... இனி அதை பெறுவது அவ்வளவு எளிதல்ல. இனிமேல் வருமான வரி விலக்கு தொடர்பான ITR ஃபைல் செய்யும் போது முறையான rent விவரங்களை அளிக்க வேண்டும். பொய்யாக கணக்கு காட்டினால் அதை தீவிரமாக பரிசீலனை செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது.
6. கூடுதல் கணக்கு காட்டும் பட்சத்தில் உங்களின் வீட்டு ஓனரின் பான் கார்டை சோதனை செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது. வீட்டு ஓனரின் பான் கார்டு பொய்யாக தரப்பட்டு இருந்தால் அதற்கும் ஆக்சன் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
7. நாடு முழுக்க பல சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த முறை பொய்யான வீட்டு வாடகை பில்களை கொடுத்தவர்களை சோதனை செய்ய தொடங்கி உள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பலரும் பொய்யாக வீட்டு வாடகை பில் கொடுக்கின்றனர்.
8. இந்த நிலையில் சிலர் 1 லட்சத்திற்கும் மேல் வருடம் வாடகை கட்டுவதாக கணக்கு காட்டுகின்றனர். இதற்கு பொய்யான பான் கார்டு விவரங்களை வீட்டு ஓனர் விவரம் என்று பலர் அளிப்பது உண்டு. முக்கியமாக பல சிஏக்கள் ஒரே மாதிரியான பொய்யான பான் கார்டு விவரங்களை பல கிளைண்டுகளுக்கு பயன்படுத்துவது உண்டு.
9. இப்படிப்பட்ட விவரங்களை வைத்து தவறாக refund பெறக்கூடியவர்களை வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது. இவர்களுக்கு கடந்த 2 நாட்களாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. முக்கியமாக் 1 லட்சத்திற்கு மேல் வாடகை கணக்கு
காட்டியவர்களுக்குத்தான் பான் கார்டு அவசியம் என்பதால் அவர்களைத்தான் வருமான வரி துறை விசாரிக்க தொடங்கி உள்ளது.
10 இவர்கள் விளக்கம் அளிக்க நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31, 2024 இல் வரை இதற்காக காலக்கெடு உள்ளது. இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் அதற்கு உரிய வரி மட்டும்.. 200% உயர்த்தப்பட்டு அபராதமாக விதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications