உங்களுக்கு காய்ச்சலா? பரவும் புது வைரஸ்! பெயர் XEC.. இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? டாக்டர் வார்னிங்
சென்னை: சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள மக்கள் பலருக்கும் திடீரென காய்ச்சல் ஏற்படுவதும், கடுமையான உடல் வலி ஏற்படுவதும் அதிகரித்து உள்ளது. இதன் அறிகுறிகள் பலருக்கும் ஒரே மாதிரியாக உள்ளது.
சென்னையில் இருக்கும் மக்கள் இடையே திடீரென காய்ச்சல் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. அதீத காலநிலை மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். அதாவது ஒரு வாரம் நல்ல மழை. மீண்டும் கடும் வெயில். பின் மீண்டும் மழை. பகல் முழுக்க கடும் வெயில்.. இரவில் நல்ல மழை என்று வானிலை மாறி மாறி வருகிறது.

மோசமான பாதிப்பு: இதனால் மக்கள் பலருக்கும் காய்ச்சல் ஏற்படுகிறது. சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு இது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்து உள்ளது.
இது தொடர்பாக மருத்துவர் டாக்டர் பிரகாஷ் மூர்த்தி எச்சரித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில், புதிதாக ஒரு வைரஸ் பரவி வருகிறது. அதன் பெயர் XEC. இது கொரோனா பிரிந்து உருவான ஒரு கிளை வைரஸ். இதற்கு என்று தனியாக டெஸ்ட் எல்லாம் இல்லை. காய்ச்சல் அதிகமாக இருக்கிறது என்றால் சிபிசி, சிஆர்பி பார்த்தால் போதும். பொதுவாக இதன் அறிகுறிகளாக தும்மல் வரும், மூக்கு அடைக்கும், தலை பாரமாக இருக்கும், அதன்பின் காய்ச்சல் ஏற்படும் பின்னர் இருமல் ஏற்படும் . பின்னர் 1 வாரத்தில் சரியாகிவிடும். இதற்கு தேவையில்லாமல் ஆண்டி பயாடிக் மருந்துகளை எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை, என்று அந்த மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
காய்ச்சல் நீடிப்பு: சிலருக்கு இந்த காய்ச்சல் போனதும் மீண்டும் 1 வாரத்தில் வருகிறது. சிலருக்கு 1 வாரம் கூட இந்த காய்ச்சல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு பலரும் செல்கிறார்கள். அதாவது அவ்வளவு எளிதாக இந்த காய்ச்சல் குணமாவது இல்லை.
அறிகுறிகள்:
சளி,
இருமல்,
அதிக காய்ச்சல்,
உடல்வலி,
தலைவலி,
தும்மல்,
மூக்கு அடைப்பு ,
தொண்டை புண்,
கண்களில் நீர் வடிதல்,
மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல்
சுவை இழப்பு, வாசனை இழப்பு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மருத்துவர்கள், கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இந்தியா முழுவதும் பரவலாக இந்த காய்ச்சல் பரவி உள்ளது. அதனால்தான் தற்போது காய்ச்சல் ; அதிகரிப்பதாக தெரிவித்து உள்ளனர், மருத்துவமனைகளுக்கு 30-40 சதவிகித கேஸ்கள் இப்படித்தான் வருகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
முக்கியமாக கடுமையான உடல் வலிதான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுத்துவதாகவும், பலருக்கும் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதாவது சளி கடுமையாக இதயத்தை நெருக்கி உள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் யாருக்கும் ஆக்சிஜன் லெவல் குறையவில்லை. அதேபோல் யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை. இந்த தொற்று குணமடைய நேரம் எடுக்கும். அறிகுறிகள் வலுவானவை.
நோயாளி குணமடைந்த பிறகும், அறிகுறிகள் சில நாட்களுக்கு காலத்திற்கு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications