திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய திட்டமா? செந்தில்குமார் எம்பி நெத்தியடி பதில்
சென்னை: "செந்தில்குமார் எம்பி திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாமே..? உண்மையா" என்று நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நெத்தியடியாக தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் பதில் அளித்துள்ளார்.
டாக்டர் செந்தில்குமார் எம்பி 2002 இல் இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்தார். 2016ல் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.டி (ஆர்.டி) படித்தார். திமுக கொள்கை மற்றும் சித்தாந்தத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட செந்தில்குமார் எம்பி, திமுக இளைஞரணியில் மிகவும் ஆக்டிவாக இருந்தார். உதயநிதியின் ஆதரவால் கடந்த 2019ம் ஆண்டு சீட் கிடைத்ததாக கூறப்படுகிறது.

தர்மபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை வீழ்த்தி நாடாளுமன்ற தேர்தலில் 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்குமார் வெற்றி பெற்றார். இவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டது முதல் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தன்னிடம் உதவி கேட்போருக்கு முடிந்த வரை உதவிகளை செய்து வருகிறார். அதேபோல் திமுகவிற்கு எதிரான பதிவிடும் பிரபலங்களை சமூக வலைதளத்தில் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார். இவரது அதிரடியான செயல்படுகளால் கடந்த ஜனவரி 2021 இல் திமுக என்.ஆர்.ஐ. நலபிரிவு இணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தர்மபுரி தொகுதி சார்பான என்ன பிரச்சனை என்றாலும் ட்விட்டரில் கேள்வி கேட்போருக்கு பதில் அளிப்பதுடன் உதவியும் செய்து வருகிறார்.

அதே நேரம் அண்மை காலத்தில் சில சர்ச்சையிலும் சிக்கினார். அரசு திட்டங்களில் பூமி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியது சர்ச்சையானது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏரியை புனரமைக்கும் பணியின்போது பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த பொதுப்பணித்துறை அதிகாரியிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஆவேசமாக பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. பொதுப் பணித்துறை அதிகாரியை அழைத்து இது திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சியில் நடைபெறும் அரசு விழாவில் இதுபோன்ற சம்பிரதாயங்கள் செய்யக்கூடாது என்று உங்களுக்கு தெரியாதா, விதிமுறைகள் வழங்கவில்லையா என ஆவேசமாக பேசிய வீடியோவிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றின.
அடுத்தாக பசு கோமிய மாநிலங்கள் (கோ மூத்ரா' மாநிலங்கள்) என்று நாம் பொதுவாக அழைக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. இதுவே பாஜகவின் பலம். ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் நடைபெறும் தேர்தலில் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிவதில்லை என்று செந்தில்குமார் எம்பி நாடாளுமன்றத்தில் பேசினார். இது பெரும் சர்ச்சையான நிலையில், அதற்கு அவர் மன்னிப்பும் கேட்டார்.
நாடாளுமன்றத்தில் பேசும் போது, கவனக்குறைவாக நான் வெளியிட்ட அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதை நாம் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று செந்தில் குமார் எம்பி கூறினார். இதனிடையே சர்ச்சைகளுக்கு மத்தியில் அமைதியாக இருந்து வரும் செந்தில் குமார் எம்பி, திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக சிலர் தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டரில் செந்தில் குமார் எம்பியை டேக் செய்து கேள்வி இப்படியாக எழுப்பினார்.. அதாவது "செந்தில்குமார் எம்பி திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாமே..? உண்மையா" என்று கேட்டார்.
இதற்கு பதிலடி கொடுத்த செந்தில்குமார் எம்பி, எனக்கு அரசியல் என்பது கொள்கை மற்றும் சித்தாந்தம் சார்ந்தது.. பிழைப்பு அல்ல." என்று நெத்தியடியாக பதிலடி கொடுத்தார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுகவில் எம்பியாக உள்ளவர்களில் மீண்டும் யாருக்கெல்லாம் சீட் கிடைக்கும் என்பது குறித்து திமுக வட்டாரத்தில் பெரிய விவாதமே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தர்மபுரி எம்பியான செந்தில்குமார், தன்னை பற்றிய வதந்திக்கு நெத்தியடியாக பதிலடி கொடுத்து முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications