வீட்டுக்கு முன் போர்டிகோ அழகா இருக்க வேண்டும் என்பதற்காக டைல்ஸ் ஒட்டுகிறீர்களா? பாருங்க
சென்னை: நிறைய பேர் வீட்டுக்கு முன் போர்டிகோ அழகா இருக்க வேண்டும் என்பதற்காக டைல்ஸ் ஒட்டுகிறார்கள்.. அப்படி டைல்ஸ் ஓட்டினால் பார்க்க நிச்சயம் அழகாவே தெரியும். ஆனால் மழை வந்தால் அல்லது தரை சிறிய அளவில் ஈரமானால் கூட என்னாகும் தெரியுமா? இதை பாருங்கள் புரியும்.
வீடு அழகாக இருக்க வேண்டும் என்று நம்மில் பலருக்கும் ஆசை இருக்கும். வீட்டிற்குள் எப்படி அழகாக ஒவ்வொரு பொருட்களையும் அழகுபடுத்தி வைப்பது, வீட்டிற்குள் ஒவ்வொரு அறையிலும் ஒரு ஒழுங்குடன் இருப்பதை விரும்புவோர். குளித்துவிட்டு கொடியில் காயப்போட வேண்டிய துண்டு முதல் நாம் பயன்படுத்தும் பேஸ்ட், பிரெஷ், சோப்பு, ஷாம்பு, உடைகள் என எல்லாவற்றையும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்..

அறைகள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். பார்க்க பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். அதற்காக வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டியிருப்பார்கள். இப்போது டைல்ஸ் ஓட்டாத வீடுகளை பார்ப்பதே அரிது. டைல்ஸ் ஒட்டித்தான் வீடுகள் கட்டப்படுகிறது. ஆனால் இந்த டைல்ஸ்கள் தண்ணீர் பட்டால் ஆபத்தானது என்பது எல்லாருக்குமே தெரியும்.
டைல்ஸ் தான் வீட்டிற்கு அழகு சேர்க்கிறது என்று விரும்புவதால் அதனை பொருட்படுத்துவது இல்லை. அதேநேரம் தண்ணீர் டைல்ஸ் கற்களில் விழுந்தால், உடனே நாம் துடைத்துவிடுவோம். ஏனெனில் டைல்ல் தரையில் தண்ணீர் சிந்தியிருந்தால், தெரியாமல் கால் வழுக்கி விழும் வாய்ப்பு அதிகம். இது எல்லாருக்குமே தெரிந்த ஒன்று தான்.

அதேநேரம் டைல்ஸ்களை வீடுகளுக்குள் உள்ள தரையில் மட்டுமின்றி, மொட்டை மாடியிலும், வீட்டுக்கு முன் போர்டிகாவிலும் சிலர் அழகுக்காக பதிக்கிறார்கள். ஆனால் டைல்ஸ் கற்கள் வீட்டின் முன்பு அழகுக்கு ஒட்டினால் கண்டிப்பாக ஆபத்தாக முடியும் வாய்ப்பு உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் டைல்ஸ் கற்களில் படும் போது, அவற்றை மிதித்து நடந்தால் வழுக்கிவிடும். அதேபோல் டைல்ஸ் கற்களில் வாகனத்தில் செல்லும் போது சருக்கி விழவும் வாய்ப்பு உள்ளது.
வீட்டுக்கு முன் போர்டிகோ அழகா இருக்க வேண்டும் என்பதற்காக டைல்ஸ் ஒட்டுகிறீர்களா?
— ✒️Writer SJB✒️ (@SJB56856832) July 6, 2024
கொஞ்சம் மழை பெய்து தரை ஈரமாய் இருக்கும்போது இந்த மாதிரி நடக்க நிறைய வாய்ப்பு உண்டு.! pic.twitter.com/HWXh2VHB04
சென்னை, கோவை போன்ற பல்வேறு நகரங்களில் வீடுகளின் முன்பு தோட்டம் வைத்த பராமரிக்கும் பலர், வீட்டின் போர்டிகா அழகாக தெரிய வேண்டும் என்று டைல்ஸ் ஒட்டுகிறார்கள். அப்படி டைல்ஸ் ஒட்டிய ஒரு வீட்டில் இரு சக்கர வாகனத்தில் ஒரு குடும்பம் வந்துள்ளது. டைல்ஸ் வழுக்கி விட்டு வாகனத்தில் வந்தவர்கள் அப்படியே சரிந்து விழுந்தனர். அவர்களை காப்பாற்ற வந்தவரும் சரிந்து விழுந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications