மாயாவதியை பார்த்ததும் கதறி அழுத ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி.. சென்னைக்கு நேரில் வந்து அஞ்சலி - ஆறுதல்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இன்று சென்னை வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். இந்த வேளையில் மாயாவதியை பார்த்ததும் அவரது மனைவி பொற்கொடி கதறி அழுதார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவருக்கு வயது 52. இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் அவர் தனது வீட்டின் அருகே, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று டூவீலர்களில் வந்த மர்மகும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் ஆம்ஸ்ட்ராங் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து அவரை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்தும், கொலை செய்த கும்பலை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக நேற்று முன்தினமே 8 பேர் போலீசில் சரணடைந்தனர். அதன்பிறகு நேற்று 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதன்மூலம் மொத்தம் 11 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்க் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் என்பதால் அவரது கொலை என்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடல் அயனாவரம் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அவரது உடலை புதைக்க அனுமதி கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை 9 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது.
இத்தகைய சூழலில் தான் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். இதற்காக உத்தர பிரதேசத்தில் இருந்து அவர் இன்று காலையில் சிறப்பு விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் காரில் பெரம்பூர் சென்று ஆம்ஸ்ட்ராங்க் உடலுக்கு மலர்வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாயாவதியை பார்த்ததும் கதறி அழுதார். அவரை மாயாவதி ஆறுதல் படுத்தியது கலங்க வைத்தது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு, மாயாவதி புகழாரம் சூட்டினார். அம்பேத்கரின் கொள்கை பிடிப்போடு கட்சி பணி ஆற்றியவர் ஆம்ஸ்ட்ராங் என்று புகழாரம் சூட்டினார்.
முன்னதாக இந்த கொலை சம்பவத்துக்கு மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் 3 பதிவுகள் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தாவது: ‛‛பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் தனது வீட்டின் அருகிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், தமிழகத்தில் தலித் மக்களுக்காக வலுவாக குரல் கொடுத்த தலைவர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த குற்றவாளிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்'' என்று நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.
அதன்பிறகு நேற்று ‛‛தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் கடின உழைப்பாளியும், அர்ப்பணிப்புள்ள மாநில கட்சி தலைவருமான ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை அவரது சென்னை இல்லத்திற்கு வெளியே கொடூரமான முயைில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உடனடியாக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதோடு மிகவும் சோகமான மற்றும் கவலையளிக்கும் இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு நாளை (அதாவது இன்று) காலை சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தவும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளேன். அமைதி காத்து, சட்டம் ஒழுங்கை காக்கும்படி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று மாயாவதி சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications