ஆம்ஸ்ட்ராங்கிடம் துப்பாக்கி இல்லை! இதுதான் நல்ல சான்ஸ்! திட்டமிட்டே தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்!
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே கொல்லப்பட்டது ஏன் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டை விட்டு எப்போது வெளியே வருவார், எத்தனை பேர் அவருடன் இருப்பார்கள் என்பதை எல்லாம் தெரிந்து கொண்டே அந்த கும்பல் வெட்டிச் சாய்த்துள்ளது தெரியவந்தது.
சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் வழக்கறிஞர். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். சுமார் 20 ஆண்டுகளாக அந்த கட்சியின் அந்த பொறுப்பில் இருந்து வருகிறார். பல்வேறு தேர்தல் விவாதங்களில் தொலைகாட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்தார். தற்போது அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை பார்வையிட ஆம்ஸ்ட்ராங் சென்றிருந்தார்.

அவருடன் பெரம்பூரை சேர்ந்த வீரமணி (65), பாலாஜி ஆகியோரும் சென்றிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு 6 பேர், 3 பைக்குகளில் வந்தனர். இதையடுத்து திடீரென ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து வெட்டினர். இந்த தாக்குதலை எதிர்பார்க்காத ஆம்ஸ்ட்ராங் தப்ப முடியாமல் அவர்களின் கொலை வெறிக்கு இரையானார். அந்த 6 பேரையும் வீரமணியும் பாலாஜியும் தடுத்தனர். ஆனால் அந்த கும்பல் அவர்களையும் சேர்த்து வெட்டியது.
இதில் ஆம்ஸ்ட்ராங் பலத்த காயங்களுடன் சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆம்ஸ்ட்ராங் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செம்பியம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பகீர் தகவலை தெரிவித்துள்ளனர்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ஆம்ஸ்ட்ராங், உரிமம் பெற்ற துப்பாக்கியை தன்னுடனேயே எப்போதும் வைத்திருப்பார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் துப்பாக்கியை வைத்திருந்தார். மேலும் லோக்சபா தேர்தலையொட்டி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தனது துப்பாக்கியை ஒப்படைத்த ஆம்ஸ்ட்ராங், ஜூன் 13 ஆம் தேதி திரும்பி வாங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கட்சி நிகழ்ச்சி, கட்சி நிர்வாகியின் வீட்டு விசேஷம், உள்ளிட்ட நிகழ்வுகள் என வெளியே சென்றாலே துப்பாக்கியுடன்தான் ஆம்ஸ்ட்ராங் செல்வாராம். அது போல் ஆதரவாளர்கள் புடைச்சூழ செல்வதும் வழக்கமாக வைத்திருந்தார்.
ஆனால் வீடு அல்லது வீட்டை சுற்றியுள்ள இடங்களுக்கு செல்லும் போது அவரிடம் துப்பாக்கி இருக்காது என்பதை அந்த கும்பல் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டே இந்த கொலையை நடத்தியுள்ளனர். பெரம்பூரில் வேணுகோபாலசாமி கோயில் தெருவில் ஒரு புதிய வீட்டை கட்டி வருகிறார். தான் வசிக்கும் அதே தெருவில் இருப்பதால் அங்கு செல்லும் போது துப்பாக்கி எடுத்துச் செல்ல மாட்டாராம்.
தினமும் அந்த வீட்டிற்கு சென்று ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை அங்கிருப்பாராம். பிறகு நடந்தோ அல்லது யாருடனாவது பைக்கிலோ சென்று வீட்டு வாசலில் இறங்கிக் கொள்வாராம். இதை எல்லாம் அந்த கும்பல் நோட்டமிட்டே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளது. மேலும் புதிய வீட்டிற்கு சென்ற ஆம்ஸ்ட்ராங்கின் கையில் துப்பாக்கியும் இல்லை, புடைச்சூழ ஆதரவாளர்களும் இல்லை என்பதை அறிந்தே இந்த சந்தர்ப்பத்தை அந்த கும்பல் பயன்படுத்திக் கொண்டது. இந்த தகவல்களை கைது செய்யப்பட்ட 8 பேரும் போலீஸார் விசாரணையில் வாக்குமூலமாக அளித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications