தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை உயர்கிறது? இல்லத்தரசிகளுக்கு ஷாக்!
சென்னை: தமிழகத்தில், தனியார் பால் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்க கூடிய ஆரோக்யா நிறுவனம் நாளை முதல் பால் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.65ல் இருந்து 67 ஆக உயர உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆவின் பால் மட்டும் இன்றி பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளும் விற்பனையாகின்றன. 10 ரூபாய் பாக்கெட் முதல் அரை லிட்டர், ஒரு லிட்டர் என பல்வேறு கொள்ளவுகளில் இந்த பாக்கெட் பால்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவின் பாலை போலவே தனியார் நிறுவனங்களின் பாலையும் மக்கள் அதிக அளவு வாங்குவதை காண முடிகிறது.

தனியார் பால் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்க கூடிய ஆரோக்யா நிறுவனம் நாளை முதல் பால் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.65ல் இருந்து 67 ஆக உயர உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பால் கொள்முதலில் எந்த ஒரு விலை உயர்வோ, பால் உற்பத்தியில் பாதிப்போ தட்டுப்பாடோ இல்லாத சூழலில், தமிழகத்தின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான ஆரோக்யா பால், தயிர் விற்பனையை நாளை காலை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் இதை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ.36ல் இருந்து 37 ஆகவும், ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.65ல் இருந்து 67 ஆகவும், நிலைப்படுத்தபப்ட்ட பால் அரை லிட்டர் ரூ.31ல் இருந்து 32 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.58ல் இருந்து 60 ஆகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30 ல் இருந்து 32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37ல் இருந்து 38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66-ல் இருந்து 68 ஆகவும் உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.
இது பொதுமக்கள் தலையில், பெரும் பாரத்தை சுமத்தும் செயலாகும். அதுமட்டும் இன்றி மற்ற தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்த தூண்டுவது போல ஆரோக்யா நிறுவனத்தின் செயல்பாடு அமைந்துள்ளது கண்டித்தக்கது ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் பால் தயிர், விற்பனை விலையை சொற்ப அளவில் மட்டும் குறைத்தனர்.
இந்த நிலையில், கடந்த ஓராண்டில் பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்கள் விலை, வாகன எரிபொருள் விலை உள்ளிடவற்றின் விலைகளில் மட்டுமல்ல. பால் முகவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்திட கமிஷன் தொகையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத சூழலில் ஆரோக்யா நிறுவனம் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை ஏற்றுவது ஏற்புடையது கிடையாது. எனவே, இந்த விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என்று தெரிவிதுள்ளார்.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications