விஜய்யை கைது பண்ணனும்.. தொண்டர்களை கட்டுப்படுத்த முடியலன்னா கட்சியை கலையுங்கள்.. அர்ஜூன் சம்பத்
சென்னை: கரூர் உயிரிழப்புகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் காரணம் என்றால் அக்கட்சியை தடை செய்யுங்கள். விஜய்யை கைது செய்யுங்கள் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் கட்சியை கலைத்துவிடுங்கள். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாதவர்கள் எதற்காக பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக அர்ஜூன் சம்பத் விஜயை கடுமையாக சாடியுள்ளார். அர்ஜூன் சம்பத் கூறியதாவது:-

விஜய்யை கைது செய்யுங்கள்
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாதவர்கள் எதற்காக பிரசாரம் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பாருங்கள் விஜய். தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் கட்சியை கலைத்துவிடுங்கள். கள்ளச்சாராய மரணத்தின் போது முதல்வர் நேரில் செல்லவில்லை.
கரூர் உயிரிழப்புகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் காரணம் என்றால் அக்கட்சியை தடை செய்யுங்கள். விஜய்யை கைது செய்யுங்கள். எதிர்க்கட்சிகள் கூட்டத்தை சீர்குலைப்பது அரசின் நோக்கம். திமுக ஆட்சியை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" என்று சரமாரியாக விமர்சித்தார்.
நாடு கடத்த வேண்டும்
தொடர்ந்து அர்ஜூன் சம்பத் பேசுகையில், "வங்கதேசத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒரு கோடி பேர் இந்தியாவில் ஊடுருவி உள்ளனர். அவர்களுக்கு காங்கிரஸ் - திமுக, மம்தா பானர்ஜி ஆகியோர் ஆதரவளிக்கிறார்கள். ஓட்டுரிமை கோரி போராடி வருகிறார்கள். இதை முறியடிக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. திருப்பூரில் ஏராளமான வங்கதேசத்தினர் இருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடித்து நாடு கடத்த வேண்டும்" என்றார்.
கரூர் கூட்ட நெரிசல்
கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகியுள்ளனர். நாட்டையே உலுக்கிய கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
நீதிமன்றத்தில் மனு
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு விளக்கம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த 4 நாட்கள் ஆகிய நிலையில் தற்போது வரையிலும் தவெகவினர் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறவில்லை என்ற விமர்சனமும் வைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கரூர் கூட்ட நெரிசல் திட்டமிட்ட சதி என்று தவெக குற்றச்சாட்டு வைத்தாலும், அதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தமிழக அரசு விளக்கம் அளித்து வருகிறது. செந்தில் பாலாஜியும் சமூக வலைத்தளங்களில் பரவும் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து உள்ளார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications