விஜய் அரசியல் ஆலோசகராக அருண் ராஜ் ஐஆர்எஸ்? ஜனவரியிலேயே கொளுத்தி போட்ட திருச்சி சூர்யா சிவா!
சென்னை: கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி மாநாடு, பொதுக்குழு கூட்டம், பூத் கமிட்டி மாநாடு ஆகியவற்றை தவெக நடத்தி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 114 மாவட்டச் செயலாளர்களை நியமித்து அடிப்படை கட்டமைப்பையும் தவெக வலுப்படுத்தி வருகிறது.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து விஜய் செயல்பட்டு வருகிறார். இளைஞர்கள் மத்தியில் தவெகவுக்கு வரவேற்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் விஜய்-ஐ தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் மக்களால் ஏற்றுக்கொண்ட முகங்கள் தவெகவில் இல்லை. புஸ்ஸி ஆனந்த் அக்கட்சியினர் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார். ஆதவ் அர்ஜுனா இதுவரை எந்த தேர்தலையும் நேரடியாக சந்தித்ததே இல்லை.

அருண் ராஜ்-க்கு பதவி?
அதேபோல் மாற்று கட்சிகளில் இருந்து தவெகவில் பெரியளவில் எந்த நிர்வாகிகளும் இணையவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் அருண் ராஜ் ஐஆர்எஸ், தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு அளிக்கவும் விஜய் முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜனவரியில் சொன்ன திருச்சி சூர்யா
அதுமட்டுமல்லாமல் தவெக தேர்தல் பணியாற்றுவதற்காக ஜான் ஆரோக்கியசாமியை கொண்டு வந்தவரே அருண் ராஜ் தான் என்று ஜனவரி மாதமே பாஜக முன்னாள் நிர்வாகியான திருச்சி சூர்யா சிவா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண் ராஜ் IRS செயல்படுகிறாரா?
திருச்சி சூர்யா சிவா பதிவு
தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் ஆலோசகர்களாக இருவர் இருப்பதாக செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன. ஒருவர் 2016ல் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று பாமகவிற்கு வேலை செய்த ஜான் ஆரோக்கியசாமி. தொண்டர்களுக்கு தெரியவில்லை என்றாலும் அரசியல் விமர்சகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இவர்தான் அவருக்கு வேலை செய்கிறார் என்பது தெரியும்.
ஜான் ஆரோக்கியசாமியை அழைத்து வந்தவர்?
அறியாத ஒரு செய்தி இந்த ஜான் ஆரோக்கியசாமியை அழைத்து வந்தவர் தற்போது மத்திய அரசு பணியில் வருமான வரித்துறையில் துணை ஆணையராக இருக்கும் அருண்ராஜ் IRS என்பது! மத்திய அரசில் பணி செய்யும் ஒருவர், ஒரு அரசியல் கட்சிக்கு ஆலோசகராக இருப்பது மட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தை எடுக்க வைத்தது இந்த அருண்ராஜ் என்ற அதிர்ச்சியான தகவலும் கிடைத்துள்ளது.
விஜய்-யுடன் நெருக்கம்
இவ்வாறு அவர் பணி செய்வது மத்திய அரசிற்கு தெரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நடிகர் விஜய்க்கு நன்கு பரிட்சயமான இவரை அணுகி தான் ஜான் ஆரோக்கியசாமி தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு சுமார் ரூ.11 கோடி வரை வாங்கி இருக்கிறார் என்ற செய்தியும் நமக்கு வந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
என்ன பதவி?
தற்போது மத்திய அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ள அருண் ராஜ் ஐஆர்எஸ்-க்கு நிச்சயம் தவெகவில் பொறுப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் 2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பணியாற்றி வந்தவர். இவருக்கு தவெகவில் துணை பொதுச்செயலாளர் அல்லது அரசியல் ஆலோசகர் பொறுப்பு அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது.
-
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்












Click it and Unblock the Notifications