அப்படியே "வாத்தியார்" மாதிரியே.. அசரடிக்கும் "எம்ஜிஆர்" அரவிந்த்சாமி!.. ஆமா பக்கத்துல யாரு அவரு?
சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் தலைவி திரைப்படத்தின் புகைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன. அதிலும் எம்ஜிஆர் கெட்டப்பில் அரவிந்த்சாமியின் புகைப்படங்களை பார்க்கும் போது அச்சு அசலாக எம்ஜிஆரை போலவே இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Recommended Video

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், இந்தி, மொழிகளில் தலைவி என்ற திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஏ எல் விஜய் இயக்கி வரும் இந்த கதையை ராஜமவுலியின் தந்தை கே வி விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர் சிங் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

அரவிந்த்சாமி புகைப்படங்கள்
கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்த நிலையில் எம்ஜிஆரின் நினைவு நாளான இன்று அந்த படத்தில் எம்ஜிஆர் வேடம் ஏற்று நடிக்கும் அரவிந்த்சாமியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

எம்ஜிஆர் கெட்டப்
எம்ஜிஆர் கெட்டப்பில் வெள்ளை குல்லா அணிந்து கொண்டு பள்ளி மாணவர்களுடன் அரவிந்த்சாமி சத்துணவு சாப்பிடும் காட்சிகள் பார்ப்பதற்கு அச்சு அசலாக எம்ஜிஆர் மாதிரி இருக்கிறது. தற்போது இன்னும் 5 மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எம்ஜிஆர் போல் உள்ள அரவிந்த்சாமியை இரு தரப்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஆர் எம் வீரப்பன்
அது போல் அரவிந்த்சாமியுடன் சமுத்திரகனியும் நடித்திருக்கிறார். அவர் அந்த படத்தில் ஆர் எம் வீரப்பன் கெட்டப்பில் நடித்திருக்கிறார். மேலும் அரவிந்த்சாமி கட்டம் போட்ட பேண்ட் போட்டு கொண்டு கருப்பு கண்ணாடியுடன் கைகளை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் படங்கள் கடந்த ஜனவரியில் வெளியானது.

ஏ எல் விஜய்
அது போல் சிவப்பு நிறத்தில் முழு கை சட்டை அணிந்து கொண்டு அப்படியே எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் போன்ற கெட்டப்பும் அருமையாக உள்ளது. இதுகுறித்து அரவிந்த்சாமி ட்விட்டரில், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கெட்டப்பில் நடித்தது எனக்கு கவுரவம் மட்டுமில்லை, பெரிய பொறுப்பும் உள்ளது. இதற்காக இயக்குநர் ஏஎல் விஜய்க்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications