மே 4 ஆம் தேதிக்கு முன்பே த்ரிஷா போட்ட போட்டோ.. இன்ஸ்டாவில் வைரல் ஆகும் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படம் ரசிகர்களிடையே விவாதத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4 ஆம் தேதிதான் நடிகை த்ரிஷாவுக்கு பிறந்தநாள். இந்நிலையில் மே மாதம் குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே விவாகரத்து நடைமுறைகள் தொடங்கி இருக்கின்றன. சங்கீதாவின் மனு சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சூழலில், நடிகை த்ரிஷாவுடன் விஜய் அண்மையில் ஒரு திருமண நிகழ்வில் ஒரே நிற ஆடையில் ஜோடியாகக் கலந்துகொண்டது சர்ச்சையை தூண்டியது.

As May 4 Nears Trisha Krishnan s Post Becomes Talking Point

இதனால் சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களே சங்கீதா, த்ரிஷா என இரண்டாகப் பிரிந்து காரசாரமாக கருத்து மோதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே த்ரிஷாவின் சமூக வலைதள பதிவுகள் நெட்டிசன்களால் அதிகம் கவனிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படம் ரசிகர்களிடையே விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளது. ஒரு புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள த்ரிஷா, "மே (Me) சீசன் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4 ஆம் தேதிதான் நடிகை த்ரிஷாவுக்கு பிறந்தநாள். இந்நிலையில் மே மாதம் குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. அவர் தான் பிறந்த மே மாதம் பற்றிச் சொல்கிறாரா? அல்லது அரசியல் பேசுகிறாரா என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

1999-ம் ஆண்டு பிரஷாந்த் - சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் த்ரிஷா. அதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் த்ரிஷா. அடுத்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ரஜினி, கமல், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

த்ரிஷா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள கருப்பு திரைப்படம் மே 14-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் த்ரிஷா. இந்நிலையில், வரும் மே 4 ஆம் தேதி தனது 43 வயதை நிறைவு செய்கிறார் த்ரிஷா.

மே 4 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு பதிலாக இப்போதே த்ரிஷா தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார். ப்ரீ பர்த்டே என்ற பெயரில் தனது தோழிகளுடன், கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள த்ரிஷா, இது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+