“ரயில்வே திட்டங்கள் தாமதமாக தமிழக அரசே காரணம்".. முதல்வர் ஸ்டாலினுக்கு அஸ்வினி வைஷ்ணவ் பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். "ரயில்வே திட்டங்கள் தாமதமாக தமிழக அரசே காரணம்" என அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தரவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டி இருந்தது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

Railway ashwini vaishnaw MK Stalin

ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியை தாமதமின்றி முழுமையாக முன்னுரிமை அடிப்படையில் விடுவித்திடவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக புதிய திட்டங்களை அனுமதித்திடவும் உரிய அறிவுரைகளை ரயில்வே அமைச்சகத்திற்கு வழங்கிட வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுனார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் இருந்து மாநிலத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2026-27 நிதி ஆண்டில் இது ரூ. 7,611 கோடியாக உயரும்.

ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. தற்போது நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலத்தில் 24% மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது, தேவைப்படும் 4,326 ஹெக்டேர் நிலத்தில் 1,052 ஹெக்டேர் நிலம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் தமிழக அரசிடம் நிலுவையில் உள்ளதால் பல முக்கிய திட்டங்கள் தாமதமாகி வருகின்றன.

நிதி பற்றாக்குறையால் ரயில்வே திட்டங்கள் முடங்கவில்லை. அவ்வாறு கூறுவது ஆதாரமற்றது. பல திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதே முக்கிய பிரச்சனையாக உள்ளது. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான (144 கி.மீ.) புதிய ரயில்வே இருப்புப் பாதை திட்டத்துக்கு 91% நிலம் கையகப்படுத்தும் பணி நிலுவையில் உள்ளது. இதேபோல், திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கான 71.33 கி.மீ. நீளம் கொண்ட புதிய ரயில்வே இருப்புப்பாதை திட்டத்துக்கு 86% நிலம் கையகப்படுத்தும் பணி நிலுவையில் உள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த 2019ல் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டின் ஒத்துழைப்பின்மை காரணமாக இந்த திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை.

இத்தகைய சவால்கள் உள்ளபோதிலும், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு பல புதிய வழித்தடங்கள், இரட்டிப்புப் பாதைகள், 3வது மற்றும் 4-வது வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஆதரிப்பதற்காக மேலும் திறன் விரிவாக்கத்துக்கான வரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 77 ரயில் நிலையங்கள் முழுமையாக மறுவடிவமை செய்யப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், 18 நிலையங்களுக்கான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. 2014 முதல் தோராயமாக 1,350 கி.மீ. ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் ரயில்வே 97% மின்மயமாக்கலை எட்டியுள்ளது. 2014 முதல் 2,386 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நவீன ரயில்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு மேம்பட்ட, மலிவான ரயில் பயணத்தை உறுதி செய்கின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 9 ஜோடி சேவைகள் தற்போது இயக்கத்தில் உள்ளன. அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸின் 9 ஜோடி சேவைகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு தயாராகவும் உறுதியாகவும் உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு வேகமான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்குவதற்கு மாநில அரசின் சரியான நேரத்திலான ஆதரவு அத்தியாவசியம் ஆகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+