பெரிய தப்பு தம்பி.. வாயை கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்ட ரோஹித் சர்மா.. விளாசிய ஜாம்பவான் வீரர்!
சென்னை: ஆசிய கோப்பை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் கடுமையான விமர்சனங்களையும், மூத்த வீரர்கள் இடையிலும் கடுமையான விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆசிய கோப்பை தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. ஆசிய கோப்பை தொடர் இந்த முறை 50 ஓவர் பார்மெட்டில் நடக்க உள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சியாக இருக்கும். முக்கியமாக பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொள்ள இந்திய அணிக்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக இருக்கும்.

இந்த தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் மாறி மாறி நடக்க உள்ளது. இந்திய அணி ஆடும் போட்டிகள் எல்லாம் இலங்கையில்தான் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் 2023 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி குழுவை இன்று பிசிசிஐ அறிவித்தது.
அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ரோஹித் சர்மா பேட்டி: இந்த நிலையில்தான் ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டியில், இந்திய அணியில் நான் விரும்பும் ஒன்று, எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய அனைத்து வீரர்களும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் மனதில் கொள்ள வேண்டியது ஒன்றுதான். உங்களுக்கு எந்த பேட்டிங் பொஷிஷனிலும் ஆடும் திறமை தேவை.
எந்த நிலையிலும் ஆடக்கூடிய வீரர்களே நமக்கு தேவை. நான் இந்த இடத்தில் நன்றாக ஆடுவேன். அதனால் அங்கே மட்டும்தான் ஆடுவேன் என்று யாரும் சொல்லக்கூடாது. வீரர்கள் எங்கும் பேட் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதாவது 4வது இடத்தில் ஆடுபவர் ஓப்பனிங் இறங்க தயாராக இருக்க வேண்டும். ஓப்பனிங் இறங்கும் நபர் 4வது இடத்தில் ஆடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். இதுவே எனது குறிக்கோள் என்றார்.
மிடில்: இந்திய அணியில் வலுவான நிரந்தரமான மிடில் ஆர்டர் இல்லாத நிலையில் ரோஹித் சர்மாவின் விட்டேத்தியான பேச்சு விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் பல வருடமாக இந்திய அணியில் சரி செய்யப்படாமல் இருக்கும் ஒரு பிரச்சனை மீண்டும் இந்த முறை இந்திய அணிக்கு எதிராக திரும்பும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் ஜாம்பவான்களாக பார்க்கப்பட்ட யுவராஜ், தோனி போன்றவர்களின் ஓய்விற்கு பின் மொத்தமாக இந்திய அணி மிடில் ஆர்டர் பலம் இழந்தது. முக்கியமாக யுவராஜ் சிங் இடத்தை நிரப்ப முடியாமல் இந்திய அணி பல வருடமாக திணறி வருகிறது. மிடில் ஆர்டரில் 4 அல்லது 5வது இடத்தில் ஆடுவதற்கு இன்னும் சரியான வீரர் கிடைக்கவில்லை.
கடந்த உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் இந்தியா தோல்வி அடைய மிடில் ஆர்டர்தான் காரணமாக அமைந்தது. இந்த மிடில் ஆர்டரில் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், சூர்யா குமார், மணீஷ் பாண்டே என்று பலரை இந்திய அணி சோதனை செய்து பார்த்துவிட்டது. ஆனாலும் யாரும் பெரிதாக மிடில் ஆர்டரில் ஆடவில்லை.

இதுவே இந்திய அணி அந்த தொடரில் தோல்வி அடைய முக்கிய காரணமாக இருந்தது. இப்போது ஆசிய தொடரிலும் அது தொடருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் மிடில் ஆர்டருக்கு உறுதியான வீரரை தேர்வு செய்யாமல் யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம் என்று ரோஹித் சொன்னது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
விமர்சனம்; 1983 உலகக் கோப்பையை வென்ற கிரிக்கெட் வீரர் மதன் லால் இது பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதில், இங்கேயும் அங்கேயும் ஒரு வீரரை களமிறக்குவது குழப்பம் ஏற்படுத்தும். பெரும்பாலும் இந்தியா ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால் ஒரு செட்டான பேட்டிங் வரிசையைக் கொண்டிருக்க வேண்டும். நிலையான பேட்டிங் வரிசை இருக்க வேண்டும்.
ஒரு வீரரை எங்கு வேண்டுமானாலும் பேட் செய்யச் சொல்லலாம் என்று ரோஹித் சொல்வது தவறு. லை. ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் அவர்களுக்கு விருப்பமான இடத்தில் பேட் செய்ய வேண்டும். இந்தியா ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால், வீரர்கள் ஆர்டர் படி முறையாக ஆட வேண்டும். .4 முதல் எண்.8 வரை. அவர்கள்தான் மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்யும் போதுதான் ஆட்டம் மாறும். இதற்கு சரியான ஆர்டர் வேண்டும். ரோஹித் சொல்வது முழுக்க முழுக்க தவறானது என்று, லால் விமர்சனம் செய்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications