பிளேயிங் 11 பக்கமே வரக்கூடாது! ஆசிய கோப்பைக்கான இந்திய அணி.. அவரை கழற்றிவிட முடிவு? ரோஹித் துணிச்சல்
சென்னை: 2023 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி குழுவை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. இதில் இடம்பெற்று இருக்கும் ஒரு வீரர் பெரும்பாலும் பிளேயிங் லெவனில் ஆடவே வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை தொடர் இந்த முறை 50 ஓவர் பார்மெட்டில் நடக்க உள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சியாக இருக்கும். முக்கியமாக பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொள்ள இந்திய அணிக்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக இருக்கும்.

இந்த தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் மாறி மாறி நடக்க உள்ளது. இந்திய அணி ஆடும் போட்டிகள் எல்லாம் இலங்கையில்தான் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் 2023 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி குழுவை இன்று பிசிசிஐ அறிவித்தது.
அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹமத்.ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
கே . எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். தேசிய அகாடமியில் இருந்து நேரடியாக இவர் இந்திய அணியில் அதுவும் ஆசிய கோப்பையில் ஆடுவது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். அவரும் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவரும் நேரடியாக இந்திய அணியில் அதுவும் ஆசிய கோப்பையில் ஆடுவது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை வீரர்கள் சூர்ய குமார், ஸ்ரேயாஸ், ரோஹித் என்று பலருக்கும் மும்பை அகர்கரால் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. அணியில் அஸ்வின் இல்லை. ஒருநாள் போட்டிகளில் அவர் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறார். இந்த முறை சாகல் இல்லை. அக்சர், ஜடேஜா, குல்தீப் உடன் இந்திய அணி செல்கிறது. பெரிதாக ஆவரேஜ் இல்லாத திலக் வர்மா மும்பை வீரர் என்ற காரணத்திற்காக இந்திய அணியில் எடுக்கப்பட்டு உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
சூர்யகுமார் யாதவ்: இந்த நிலையில்தான் அணியில் இடம்பெற்று இருக்கும் சூர்யகுமார் யாதவ் பெரும்பாலும் பிளேயிங் லெவனில் ஆடவே வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது அவரின் ஒருநாள் ஆவரேஜ் மிக மோசமாக உள்ளது. அவரின் ஆவரேஜ் வெறும் 24.3.இதனால் பெரும்பாலும் அவரை அணியில் பெஞ்சில் அமர வைக்கும் திட்டத்தில் ரோஹித் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆடும் 11 பேர்: இந்த தொடரில் இந்திய அணியில் ஆடும் 11 வீரர்கள் பெரும்பாலும், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹமத். ஷமி ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.
அல்லது ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
சஞ்சு சாம்சன்: இன்னொரு பக்கம் நன்றாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் ஸ்டான்ட் பை வீரராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரின் ஓடிஐ ஆவரேஜ் இந்த வருடம் 55.7 ஆனால் சூர்ய குமார் யாதவ் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். அவரின் ஆவரேஜ் வெறும் 24.3. ஓடிஐ ஆவரேஜில் இந்த அணியில் இரண்டாம் இடத்தில் உள்ள சஞ்சுவிற்கு இடமில்லை. ஆனால் மற்ற வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது.
வீரர்களின் ஆவரேஜ் பின்வருமாறு:
கில்: 69.4
சாம்சன்: 55.7
ஐயர்: 48.5
கிஷன்: 46.3
ராகுல்: 43.6
ரோஹித்: 42.5
கோலி: 39.0
சூர்யா: 24.3












Click it and Unblock the Notifications