அஸ்ரா கார்க் இனி விசாரிக்க முடியாது! டெல்லிக்கு செல்லும் கரூர் ஆதாரங்கள்! சிபிஐ வசம் முழு கண்ட்ரோல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் இந்த வழக்கில் மேற்கொண்டு ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை செய்ய முடியாது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் 8-வது நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான SIT முக்கியமான பல ஆதாரங்களை திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் விவகாரம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இவர் திரட்டும் ஆதாரங்கள் விஜய்க்கு எதிராகவும் அவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் திரும்பலாம் என்று கூறப்படுகிறது. திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டையில் இருந்து கூடுதல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு SIT விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது.

Asra Garg IPS SIT can not investigate the TVK Vijay Karur Incident anymore as CBI takes over

முக்கியமான ஆதாரங்களை திரட்டும் அஸ்ரா கார்க்

ஏற்கனவே ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான SIT முக்கியமான பல ஆதாரங்களை திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அங்கே மீட்டிங் தாமதிக்கப்பட்டது தொடங்கி வாகனங்களில் இருந்த கேமராக்கள், சிசிடிவி சாட்சிகள் வரை பல விஷயங்களை அந்த குழு திரட்டி உள்ளதாம். அதோடு அங்கே நேரடி சாட்சியங்களாக இருந்த மக்களின் வாக்குமூலங்களை திரட்டி உள்ளதாம்.

அங்கே உள்ளே மக்களிடம் விசாரணை குழு முக்கிய வாக்குமூலங்களை பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களிடமும் அவர்களின் குடும்பங்களிடமும் ஆதாரங்களை பெற்றுள்ளனர். விஜய் தாமதமாக வந்தது, நீர் கூட கொடுக்காதது, முறையாக ஏற்பாடுகளை செய்யாதது உள்ளிட்ட ஆதாரங்களை இந்த SIT திரட்டி வருகிறது.

அதேபோல் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் போலீஸ் அறிவுரையை ஏற்க மறுத்தது. போலீசார் கொடுத்த திட்டங்களை ஏற்க மறுத்தது, முன்கூட்டியே வாகனத்தை நிறுத்த சொல்லியும் ஏற்க மறுத்தது உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் ஆதாரங்களாக திரட்டி வருகிறார்கள். ஆனால் மேற்கொண்டு அஸ்ரா கார்க் விசாரணை செய்ய முடியாது.

அஸ்ரா கார் விசாரணை

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இனி மேற்கொண்டு அஸ்ரா கார்க் விசாரணை செய்ய முடியாது. கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் அதை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு கண்காணித்து விசாரிக்கும் இந்த குழுவில் இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் ஆனால் அந்த இரண்டு அதிகாரிகளும் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர்களாக இருக்கக்கூடாது, என்று இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

கோர்ட் உத்தரவு முறையாக வந்த பின் அஸ்ரா கார்க் டீம் ஆதாரங்களை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் அனுப்பும். அதன்பின் அதை விசாரணை கமிட்டி பெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+