முக்கிய ஆதாரங்களை திரட்டிய அஸ்ரா கார்க் டீம்! தவெகவிற்கு பெரிய செக்! விஜய்க்கு நொடிக்கு நொடி சிக்கல்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் 8-வது நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான SIT முக்கியமான பல ஆதாரங்களை திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் விவகாரம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இவர் திரட்டும் ஆதாரங்கள் விஜய்க்கு எதிராகவும் அவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் திரும்பலாம் என்று கூறப்படுகிறது. திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டையில் இருந்து கூடுதல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு SIT விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது.
முக்கியமான ஆதாரங்களை திரட்டும் அஸ்ரா கார்க்
ஏற்கனவே ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான SIT முக்கியமான பல ஆதாரங்களை திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அங்கே மீட்டிங் தாமதிக்கப்பட்டது தொடங்கி வாகனங்களில் இருந்த கேமராக்கள், சிசிடிவி சாட்சிகள் வரை பல விஷயங்களை அந்த குழு திரட்டி உள்ளதாம். அதோடு அங்கே நேரடி சாட்சியங்களாக இருந்த மக்களின் வாக்குமூலங்களை திரட்டி உள்ளதாம்.

அங்கே உள்ளே மக்களிடம் விசாரணை குழு முக்கிய வாக்குமூலங்களை பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களிடமும் அவர்களின் குடும்பங்களிடமும் ஆதாரங்களை பெற்றுள்ளனர். விஜய் தாமதமாக வந்தது, நீர் கூட கொடுக்காதது, முறையாக ஏற்பாடுகளை செய்யாதது உள்ளிட்ட ஆதாரங்களை இந்த SIT திரட்டி வருகிறது.
அதேபோல் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் போலீஸ் அறிவுரையை ஏற்க மறுத்தது. போலீசார் கொடுத்த திட்டங்களை ஏற்க மறுத்தது, முன்கூட்டியே வாகனத்தை நிறுத்த சொல்லியும் ஏற்க மறுத்தது உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் ஆதாரங்களாக திரட்டி வருகிறார்கள்.
சிக்கலாக முடியும்
இதில் பல ஆதாரங்கள் விஜய் தரப்பிற்கு சிக்கலாக முடியும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றன. கரூர் நிகழ்விற்கு பின் வதந்தி பரப்பியது, நிறைய கான்ஸ்பிரசி தியரியை பரப்பியது உள்ளிட்ட விஷயங்களையும் இந்த குழு விசாரித்து வருகிறது.
இந்த SIT அறிக்கை விஜய்க்கு பெரிய சிக்கல் ஆகும். விஜய்க்கு எதிராக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இவர் திரட்டும் ஆதாரங்கள் விஜய்க்கு எதிராகவும் அவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் திரும்பலாம் என்று கூறப்படுகிறது.
SIT குழுவை எதிர்க்கும் விஜய்
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் கூட்டத்தில் பலியான சிறுவனின் பெற்றோர் தரப்பு கடந்த வாரம்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. இதனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டத்தில் பலியான சிறுவனின் பெற்றோர் தரப்பு வாதம் வைத்தது. இதற்கு தமிழக அரசு முறையான பதிலடியை கோர்ட்டில் கொடுத்துள்ளது.
அதில், கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடக்கட்டும். முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும். தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை.
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் தரப்பில் விளக்கமே கேட்காமல், உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கரூரில் இருந்து போலீசாரின் கட்டாயத்தால் விஜய் வெளியேறினார்.
பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது. இதை பற்றி முறையாக விசாரிக்க நீதிபதி தலைமையிலான SIT தேவை. இதனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும், என்று வாதம் வைத்தது குறிப்பிடத்தக்கது. நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. நாளை தீர்ப்புக்கு பின் வழக்கு சிபிஐ வசம் செல்லாத பட்சத்தில்.. அஸ்ரா கார்க் விசாரணை வேகம் எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications