5 வயது சிறுவன் பலியான சம்பவத்தில் ட்விஸ்ட்.. கல்லால் அடித்துக்கொன்ற வட மாநில இளைஞர் கைது!
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தன்பாலினச்சேர்க்கைக்கு மறுத்த 5 வயது சிறுவன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அசாமைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார், காஜல் குமாரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 5 வயது சிறுவன் ஆரவ்குமார் கடந்த 9 ஆம் தேதி காணாமல் போனதாக சிறுவனின் தாய் காஜல் குமாரி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகார் தொடர்பாக கடந்த 12 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறுவனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி சிறுவன் அதே கிராமத்தில் அடர்ந்த முட்புதரில் தலையில் காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
சிறுவன் தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டதாக முதலில் நினைத்தனர். இருப்பினும் விசாரணையை முடுக்கி விட்ட போலீசார், வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வந்த குடியிருப்பின் முன்பு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, சிசிடிவி காட்சியில் சிறுவனை இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், அசாமை சேர்ந்த போல்தேவ் (22) என்பவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில், 5 வயது சிறுவன் தன்பாலினச் சேர்க்கைக்கு மறுத்ததால் அடர்ந்த முட்புதருக்கு அழைத்து சென்று கல்லால் அடித்துக் கொன்றதாக போல்தேவ் போலீசாரிடம் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அசாமைச் சேர்ந்த போல் தேவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications