விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் தீவிரம் காட்டுகிறார்கள். தவெகவை தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா விஜய்க்கு நேரடியாக ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு விஜய் அளித்துள்ள பதிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர், ராமதாஸ் - சசிகலா அணி என்று ஐந்து முனை போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சி அதிருப்தி வாக்குகள் பிரிவதால் திமுகவுக்கு சாதகமான நிலை நிலவுகிறது. (Assembly Election 2026)

தவெக - பாஜக பேச்சுவார்த்தை
திமுக பிரம்மாண்ட கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக - பாஜக எதிர்பார்த்த கூட்டணியை அமைக்கவில்லை. இரண்டு முனை போட்டி இருந்தால் மட்டுமே திமுகவை சுலபமாக வீழ்த்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாராம். இதற்காக தவெகவை தங்கள் கூட்டணியில் இழுப்பதற்கு அமித்ஷா முயற்சி செய்தார்.
பாஜகவை கொள்கை எதிரியாக சித்தரித்த விஜய் ஆரம்பத்தில் பிடி கொடுக்காமல் இருந்துள்ளார். ஆனால் கரூர் கூட்ட நெரிசல் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படத்திற்கான தடை, மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு போன்ற நெருக்கடிகளால் விஜய் பாஜக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தினார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் அதை ஆமோதித்துள்ளார்.
விஜய்யிடம் பேசிய ஜெய்ஷா
ஆனால், "பாஜகவுடன் தவெக கூட்டணி அமைத்தால், நம் அரசியல் எதிர்காலம் பாதிக்கும்" என்று ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி கூறியுள்ளனர். இதனால் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவில்லை. கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்காக விஜய் கடந்த வாரம் டெல்லி சென்றார். அங்கு அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு நெருக்கமானவர்களுடன் கூட்டணி குறித்து விஜய் பேசியுள்ளார்.
"நீங்கள்.. எங்கள் கூட்டணிக்கு வாருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுக்கிறோம்" என்று ஜெய்ஷா நேரடியாக மெசேஜ் கொடுத்துள்ளார். அதற்கு விஜய், "எனக்கு திமுக, அதிமுக இருவரையும் பிடிக்கவில்லை. இருவரும் ஊழல் கட் சிகள் தான். அவர்களுக்கு மாற்றாக வர வேண்டும் என்பதற்காக தான் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துள்ளேன்.
நீண்ட கால அஜென்டா
அதிமுக தலைமை வகிக்கும் கூட்டணியில் இணைய விருப்பமில்லை. பாஜகவை கொள்கை எதிரியாக சொல்லிவிட்டு, முதல் தேர்தலிலேயே உங்களுடன் இணைந்தால் என் இமேஜ் பாதிக்கும். இந்த தேர்தலில் விட்டுவிடுங்கள். என் பலத்தை தேர்தலில் காட்டுகிறேன். தேர்தலுக்கு பிறகு நாம் பேசிக் கொள்ளலாம்" என்று விஜய் கூறியுள்ளாராம்.
பாஜகவின் கூட்டணிக்கு முழுமையாக முட்டுக் கட்டை போடாமல் இருப்பது அவர்களுக்கு மறைமுகமாக வழங்கியிருக்கும் சிக்னல் என்று கூறப்படுகிறது. இதன் பிறகு தான் தவெக இப்தார் விருந்து நிகழ்ச்சியில் விஜய் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார். 2 திராவிட கட்சிகளையும் வீழ்த்த வேண்டும் என்கிற நீண்ட கால அஜென்டாவுடன் தவெக - பாஜக பயணிப்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications