Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது
கோவை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே இருப்பதால் தொகுதிகளை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதற்காக அங்கு 4 தொகுதிகளை தேர்வு செய்து ஆலோசனை செய்து வருகிறாராம்.
2021 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை அவரின் சொந்த ஊரான அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அண்ணாமலை கோவை மாவட்டத்தில் கவனம் செலுத்தினார். அவரின் மனைவி அகிலாவின் சொந்த ஊர் கோவை தான். கோவைக்கு வரும்போது அவரின் மாமனார் வீட்டில் தங்கி வந்தார். (Assembly Election 2026)

அண்ணாமலை அதிருப்தி
பிறகு காளப்பட்டி அருகே அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் அவர் வெற்றி பெறாவிடினும் சுமார் 4.5 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். கோவையை தங்களின் கோட்டையாக வைத்திருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
2026 தேர்தலிலும் பாஜக தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணி இறுதியானதால் அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை கட்சி பணிகளில் இருந்து விலகியிருந்தார்.
4 தொகுதிகள் டார்கெட்
தொகுதி பொறுப்பாளர் பதவியில் இருநதும் அவர் விலகியிருந்தார். அண்ணாமலை தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் சொல்லப்பட்டது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகின. இதேபோல கவுண்டம்பாளையம், பல்லடம், பழனி தொகுதிகளிலும் அவர் போட்டியிடுவதாக கூறப்பட்டது.
கோவையில் தனக்கான செல்வாக்கு இருப்பதாக கருதி அவர் மீண்டும் கோவையில் போட்டியிட முடிவு செய்துவிட்டாராம். சிங்காநல்லூர், கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு ஆகிய 4 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் அண்ணாமலை போட்டியிடவுள்ளாராம். இதற்காக அந்த 4 தொகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறாராம்.
எந்த தொகுதியில் போட்டி
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த 4 தொகுதிகளில் பாஜக பெற்ற வாக்குகள், தற்போதைய கள நிலவரம், அதிமுக, பாஜகவின் அமைப்பு, அங்கு திமுகவின் பலம் பலவீனம் ஆகியவற்றின் அடிப்படையில் அண்ணாமலை ஒரு தொகுதியை டிக் செய்யவுள்ளாராம். முதல்கட்ட தகவல்படி அண்ணாமலை மாநகரில் உள்ள தொகுதியை தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications