மீண்டும் 'நண்பேன்டா'வாகும் அதிமுக- பாஜக! எத்தனை முறை கூட்டணி.. எத்தனை முறை மோதல்கள்-அடடே சரித்திரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தாவ இருக்கிறது. அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் பரஸ்பரம், நாங்கள் இருவருமே எதிரி கட்சிகளே இல்லை; எங்கள் இலக்கு திமுகதான் என கோரஸ் பாடி வருவதன் மூலம் இரு கட்சிகளும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணியாக களம் காண தயாராகிவிட்டன என்பதாக பார்க்கப்படுகிறது.

1998-ல்தான் முதன் முதலாக அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தது. ஆனால் இந்த கூட்டணி ஓராண்டு மட்டுமே நீடித்தது. அப்போது ஜெயலலிதாவின் ரூ11.59 கோடி சொத்துகளை ஜப்தி செய்ய சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதேபோல தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்றது. தம்மை வழக்குகளில் இருந்து காப்பாற்றும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவும் மத்தியில் அதிமுக ஆதரவுடன் நடைபெற்ற பாஜக தலைமையிலான (பிரதமர் வாஜ்பாய்) ஆட்சிக்கு கடும் நெருக்கடி கொடுத்துப் பார்த்தார் ஜெயலலிதா. ஆனால் பிரதமர் வாஜ்பாய் கைவிரித்துவிட்ட நிலையில் மத்திய அரசுக்கான ஆதரவை அதிமுக வாபஸ் பெற்றது. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது. திமுக- பாஜக இடையே கூட்டணி அமைந்தது.

assembly election 2026 tamilnadu aiadmk bjp 2026

2004-ல் அதிமுக, பாஜக கூட்டணி

2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது. அப்போது மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. ஆனால் அந்த லோக்சபா தேர்தலில் பாஜகவால் வெல்ல முடியவில்லை. இதனால் லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அதிமுக- பாஜக கூட்டணி 2-வது முறையாக முறிந்தது. ஜெயலலிதா மறைவு வரை அதிமுக, பாஜக இடையே எந்த உறவும் இல்லாமலே இருந்தது.

2016-க்குப் பின் பாஜக பிடியில் அதிமுக

2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக என்கிற கட்சியே மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காரணத்தால் பாஜக பிடியில் சிக்கியது. அதிமுகவின் ஒவ்வொரு நகர்வையும் டெல்லி பாஜக மேலிடமே தீர்மானித்தது; அதிமுகவில் பிளவுபட்டிருந்த ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளை ஒருங்கிணைத்ததும் டெல்லி பாஜக மேலிடம்தான். இதனால் 2019 லோக்சபா மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களை அதிமுக- பாஜக கூட்டணியாகவே இரு கட்சிகளும் சந்தித்தன. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்தியில் பாஜக வென்ற போதும் தமிழ்நாட்டில் அந்த கூட்டணியால் வெல்ல முடியவில்லை. அதிமுக அந்த தேர்தலில் ஒரே ஒரு இடம்தான் வென்றது.

மீண்டும் உடைந்த அதிமுக- பாஜக கூட்டணி

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியே களம் கண்டது. அதிமுக 66 இடங்களிலும் பாஜக 4 இடங்களிலும் வென்றது. அதிமுக உட்கட்சி குழப்பங்களால் தற்போது அக்கட்சிக்கு 62 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதன் பின்னர் அதிமுக, பாஜக இடையேயான விரிசலும் தொடங்கியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது; பரஸ்பர விமர்சனங்கள், கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் முறிந்தது.

தனித்தனியே போட்டி

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக, பாஜக இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. ஆனால் இரு கூட்டணிகளுமே ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.

பாஜகவின் வியூகம்

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை வலிமையான கூட்டணி மூலம் எதிர்கொள்ள வேண்டும் என பாஜக முனைப்பு காட்டுகிறது; ஒருங்கிணைந்த அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைக்கவே பாஜக விரும்பியது. இதற்கு தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

மீண்டும் நண்பேன்டா கட்சிகளாகும் அதிமுக, பாஜக

2025-ல் தற்போது, அதிமுக மற்றும் பாஜக இரு தரப்பிலுமே கூட்டணிக்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டிருக்கின்றன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என தடாலடியாக தலைகீழ் பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; அதேபோல, அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+