1800+ வேட்பாளர்கள், 6.1 கோடி வாக்காளர்கள்.. கேரளா, புதுவை, அசாமில் வாக்குப்பதிவு நிறைவு
சென்னை: சுமார் 6.1 கோடி பேர் வாக்காளர்கள் அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களித்து உள்ளனர். ஒரே கட்டமாக நடைபெற்ற இந்தத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. மொத்தம் 296 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதற்காகத் தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

கேரளா
நமது அண்டை மாநிலமான கேரளாவில் 140 இடங்களுக்கான முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) தொடர்ந்து 3வது முறையாக வெல்லும் முனைப்பில் இருக்கிறது.. தனது சமூக நலத்திட்டச் சாதனைகளை முன்னிலைப்படுத்தி இடதுசாரிகள் பிரச்சாரம் மேற்கொண்டது. மறுபுறம், வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா தலைமையிலான காங்கிரஸ் நிர்வாக ஊழல்களையும் முன்வைத்து பிரச்சாரம் செய்தது.
பாஜகவும் அங்கு ஆட்சியை அமைக்கும் ரேஸில் பாஜக இல்லை என்றாலும் ஓரிரு இடங்களில் வெல்ல வேண்டும் என நினைகிறது. இதன் காரணமாகவே ராஜீவ் சந்திரசேகர் போன்ற முக்கிய வேட்பாளர்களைக் களமிறக்கி இருந்தது. கேரளாவில் 985 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.. கேரளாவில் இதற்கு முன்பு இவ்வளவு வேட்பாளர்கள் களமிறங்கியதே இல்லை. அனைத்து தரப்பினரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பெரியார் புலிகள் சரணாலயம் போன்ற தொலைதூரப் பகுதிகளிலும் சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது.

புதுச்சேரி
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் ஒரு தனித்துவமான சூழ்நிலை நிலவுகிறது. ரங்கசாமி தலைமையிலான என்.டி.ஏ மற்றும் காங்கிரஸ் இடையே தான் இங்குப் போட்டி நிலவுகிறது. அதேநேரம் காங்கிரஸ் திமுக ஒரே கூட்டணியில் இருந்தாலும் தனித்தனியாக சில தொகுதிகளில் களமிறங்குகிறது. இது எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளது. அதேபோல விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதனால் பல தொகுதிகளில் வெறும் சில வாக்குகள் கூட வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும்.
தேர்தல் வாக்குப்பதிவு LIVE: காலை முதலே ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களிக்கும் பொதுமக்கள்!
— Oneindia Tamil (@thatsTamil) April 9, 2026
More Details: https://t.co/JYTe9JifTH#PuducherryElection2026 #KeralaElection2026 #NewsUpdate #Oneindia #OITamil pic.twitter.com/ApCNvQch4y
அசாம்
அசாமில் உள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான போட்டி கடுமையாக உள்ளது. முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பாஜக, மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கத் தீவிரம் காட்டி வருகிறது. பொது சிவில் சட்டம், எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்டவை அங்குப் பேசுபொருளாக உள்ளது. மறுபுறம் காங்கிரஸ் இந்த முறை கோகோய் தலைமையில் போட்டியிடுகிறது. நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் விலைவாசி உயர்வை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் முன்வைத்துள்ளன. அங்கு மொத்தம் 789 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், போட்டி கடுமையாக இருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை
இன்றே வாக்குப்பதிவு என்றாலும் கூட தேர்தல் முடிவுகளுக்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களுக்கு இம்மாத இறுதியில் தேர்தல் நடக்கும் சூழலில், அத்தோடு அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான வாக்குகளும் மே 4ம் தேதி எண்ணப்படும். அதுவரை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்பில் வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications