• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
LIVE

PM Modi Tamil Nadu Visit: திமுக- காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கோவையில் சரமாரி அட்டாக்!

|

கோவை: கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணியை பிரதமர் மோடி சரமாரியாக தாக்கி விமர்சித்தார்.

Newest First Oldest First
6:02 PM, 25 Feb
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அனைத்து மாநிலங்களின் விருப்பங்களை மையமாக கொண்ட கட்சி- மோடி
6:02 PM, 25 Feb
தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்தியது அதிமுகவும் மத்திய பாஜக அரசும்தான்- மோடி
6:02 PM, 25 Feb
ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு காங்கிரஸும் திமுகவும் வெகுமதி கொடுத்தன- மோடி ஒட்டுமொத்த தமிழகத்துக்கான கட்சி என்ற தகுதியை இழந்துவிட்டது திமுக- மோடி. திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைந்து 25 ஆண்டுகளாகிவிட்டன- மோடி. பிராந்திய கட்சிக்குள் ஒரு பிராந்திய கட்சியாக இருக்கிறது திமுக. திமுக, காங்கிரஸ் உட்கட்சி பிரச்சனைகளால் நல்லாட்சியை தர முடியாது- மோடி
5:57 PM, 25 Feb
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்- மோடி. அம்மா ஜெயலலிதாவை திமுக எப்படி நடத்தியது என்பதை தமிழ்நாடு அறியும்- பிரதமர் மோடி. ஊழலுடன் கூடிய கூட்டாட்சி, கருணை ஆட்சி என்ற 2 முறைகளை பார்க்கிறோம். சுயலாபம் மட்டுமே எதிர்க்கட்சிகளின் இலக்கு. திமுகவும் காங்கிரஸும் எப்படி கொள்ளையடிப்பது என சிந்திக்கின்றனர்- மோடி. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சமூக விரோதிகளை தங்கள் பக்கம் வைத்து கொள்கின்றனர்- மோடி. திமுக ஆட்சிக் காலத்தின் மின்வெட்டை நீங்கள் மறந்துவிட்டீர்களா? - மோடி
5:52 PM, 25 Feb
தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்துக்கு பிரதமர் மோடி புகழாரம்
5:51 PM, 25 Feb
தமிழகத்தில் 12 லட்சம் இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 14 லட்சம் குடிநீர் இணைப்புகள் கிராமங்களில் கொடுக்கப்பட்டுள்ளன- பிரதமர் மோடி.
5:50 PM, 25 Feb
சிறிய விவசாயிகளுக்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது. விவசாயிகளின் கடன் அட்டை, மண் பரிசோதனை அட்டை ஆகியவற்றை செயல்படுத்துகிறோம். பிரதமரின் கிஷான் திட்டத்தால் பல கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை செயல்படுத்தியது மத்திய அரசு- மோடி.
5:49 PM, 25 Feb
3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் - மோடி
5:49 PM, 25 Feb
வலிமையான ஜவுளித்துறையை கட்டமைக்க கவனம் செலுத்துகிறோம். ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. சிறுகுறு தொழில்களுடன் நான் இணைந்து நிற்கிறேன் - பிரதமர் மோடி.
5:45 PM, 25 Feb
சிறுகுறு தொழில்கள் மேம்பாட்டுக்கு சாம்பியன் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுகுறு தொழில் நிறுவனங்களின் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5:43 PM, 25 Feb
சிறு குறு தொழில் எது என்பதை கடந்த ஆண்டு மாற்றி அமைத்துவிட்டது. கோவையில் 25,000 சிறுகுறு நிறுவனங்கள் மத்திய அரசால் பயனடைந்துள்ளன- மோடி.
5:41 PM, 25 Feb
குறு சிறு தொழில்கள்துறைதான் தற்சார்பு பொருளாதாரத்துக்கு மதிப்பு சேர்த்துள்ளன. கோவை பகுதியில் மத்திய அரசின் கடனுதவி திட்டங்கள் பெருமளவில் சென்றடைந்துள்ளன- மோடி.
5:40 PM, 25 Feb
கூட்டுறவு கூட்டாட்சிக்கு நல்ல உதாரணமாக மத்திய அரசும் தமிழக அரசும் உள்ளன. சிறிய வியாபாரிகள், சிறிய விவசாயிகளுக்கு மத்திய பாஜக அரசு முக்கியத்துவம் தருகிறது- பிரதமர் மோடி.
5:40 PM, 25 Feb
தமிழகம் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கப் போகிறது. இந்திய வரலாற்றின் இக்கட்டான காலத்தில் தேர்தல்கள் நடைபெறுகின்றன. வளர்ச்சிக்கு எதிரானவர்களை இந்திய மக்கள் ஒதுக்கி வைக்க நினைக்கின்றனர்- பிரதமர் மோடி.
5:35 PM, 25 Feb
சிந்தனையாளர்கள், விடுதலை வீரர்கள், விஞ்ஞானிகள் பிறந்த மண் கொங்கு மண் - பிரதமர் மோடி
5:33 PM, 25 Feb
வணக்கம் தமிழ்நாடு! வணக்கம் கோயம்புத்தூர்! வெற்றி வேல்! வீரவேல்! என தமிழில் பேச்சை தொடங்கினார் மோடி
5:32 PM, 25 Feb
கோவை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார்
5:29 PM, 25 Feb
பிரதமர் மோடிக்கு வேல் நினைவு பரிசாக அளிக்கப்பட்டது
5:20 PM, 25 Feb
வெற்றி வேல்! வெற்றி வேல்! வீரவேல்! வீரவேல்! என பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் முழக்கம்
5:16 PM, 25 Feb
கோவை தேர்தல் பிரசார பொதுகூட்டத்துக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி
5:01 PM, 25 Feb
பிரதமர் மோடி உரையை நிறைவு செய்தார்
5:00 PM, 25 Feb
அனைவருக்கும் வீடுகள் என்பதற்காக பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் தொடங்கப்பட்டது
5:00 PM, 25 Feb
அனைவருக்கும் வீடுகள் என்பதற்காக பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் தொடங்கப்பட்டது
4:57 PM, 25 Feb
மத்திய அரசின் சாகர்மாலா உள்ளிட்ட திட்டங்களின் பயன்கள் தொடர்பாக பிரதமர் மோடி விவரிப்பு
4:51 PM, 25 Feb
புதியதாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழகம் 65% பெறும்- பிரதமர் மோடி
4:50 PM, 25 Feb
இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழகம் மிகப் பெரிய பங்களிப்பு செய்கிறது. 2 முக்கிய மின் திட்டங்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன- பிரதமர் மோடி.
4:47 PM, 25 Feb
தொழில் நகரமான கோவைக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி. கீழ் பவானி நவீனமயமாக்கல் திட்டத்தால் விவசாயிகள் பயனடைவர். உழுதுண்டு வாழ்வாரே என்கிற திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி உரை.
4:44 PM, 25 Feb
வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி
4:41 PM, 25 Feb
என்.எல்.சியின் 2 புதிய அனல் மின் நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
4:41 PM, 25 Feb
8 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
READ MORE

Assembly Elections: PM Modi to visit TamilNadu, Puducherry today

English summary
Ahead of Assembly Elections, PM Narendra Modi will visit TamilNadu and Puducherry today. Here are Live Updates of PM Modi's today visit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X