முதல்வர் விஜய் பேச்சை நீக்க மறுப்பு.. சபாநாயகர் முன் அமர்ந்து திமுகவினர் தர்ணா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. நேற்றைய நிகழ்வில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை கொடுத்தார். சட்டமன்றத்தில் தவெக திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சட்டசபை பட்ஜெட் மானிய கோரிக்கை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மிசா, அமலாக்கத் துறை வழக்கு, சர்க்காரிய கமிஷன் தொடர்பான முதல்வர் விஜய் கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி சபாநாயகர் இருக்கை முன் வந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை ஆகியவற்றை தொடர்ந்து, கடந்த 17 ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. தவெக, திமுக இடையே கடும் விவாதம் ஏற்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டுக்கு நேற்று முதலமைச்சர் விஜய் பதிலுரை கொடுத்தார்.

Assembly Kallakurichi

சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைய தினம் மட்டும் 8 துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தின்போது, திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில், நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள், சர்க்காரிய அறிக்கை குறித்து முதலமைச்சர் விஜய் ஆதாரமில்லாமல் பேசி இருக்கிறார். காவல்துறை மானியம் தொடர்பான தகவல்களைத் தவிர்த்து மிசா, மாறன் குறித்து முதல்வர் பேசிய கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்து பேசினார்.

இதையடுத்து, முதல்வர் விஜய் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் முதல்வர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என உறுதியாகக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் எழுந்து கோஷம் எழுப்பியதோடு, சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்னாவிலும் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2024 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் களத்தில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தின் முழுவிபரம் இருப்பதுடன், கள்ளச்சாராயத்தை தடுப்பதற்கான பரிந்துரையும் வழங்கப்படும். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியலின மக்களுக்கு பின்பற்றுவதை போல, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சாதி விபரம் சேகரிக்க வலியுறுத்தி தனி தீர்மானம் முன்மொழியப்படவுள்ளது. திறந்தவெளி பதிவுமுறையை கைவிட வலியுறுத்தப்படவுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் இதற்கான தீர்மானத்தை முன்மொழியவுள்ளார்.

தனியார் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, திமுக ஆட்சி தொடர்பாக தணிக்கைத்துறை ஆய்வு ஆகியவையும் தாக்கல் செய்யப்படுகிறது. கடைசி நாளான இன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1.30 மணிக்குள் அவை நிகழ்வுகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் பிறகு சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+