கோடிகளில் புரளும் வேட்பாளர்கள்! டி.ஆர்.பாலு, சௌமியா அன்புமணி, பொன்னார் சொத்து மதிப்பு விவரங்கள்
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்கள், வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், முக்கிய வேட்பாளர்களின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தற்போது வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 405 வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

விஜய பிரபாகரன்: அதன்படி, விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரும், மறைந்த நடிகர் விஜயகாந்த் மகனுமான விஜய பிரபாகரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.17 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் ரூ.11.38 கோடி அசையும் சொத்து என்றும், ரூ.6.57 கோடி அசையா சொத்து எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் பெயரில் ரூ.6.49 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.48 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருக்கின்றன. கடனை பொறுத்த அளவில், விஜய பிரபாகரனுக்கு ரூ.12 கோடி கடனும், பிரேமலதா விஜயகாந்த்துக்கு ரூ.5 கோடி கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தேவநாதன்: அதேபோல சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனுக்கு ரூ.300 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இவரது மனைவி பெயரில் ரூ.25 கோடியும், மகள் இருவரின் பெயரில் தலா ரூ.40 கோடியும் இருக்கின்றன.
கார்த்தி சிதம்பரம்: இந்த தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரத்திற்கு ரூ.127 கோடி சொத்து இருக்கிறது.
தமிழிசை சௌந்தரராஜன்: தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ரூ.19 கோடி சொத்து இருப்பதாகவும், அவரது கணவருக்கு ரூ.3.92 கோடி சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அசையா சொத்துக்களை பொறுத்த அளவில் தமிழிசை பெயரில் ரூ.60 மதிப்பிலும், அவரது கணவர் பெயரில் ரூ.13.70 மதிப்பிலும் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரன்: திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.21.92 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில், தனக்கும், தனது மனைவிக்கும் ரூ.14.03 கோடி அசையும் சொத்து, ரூ.7.89 கோடி அசையா சொத்து; தனது குடும்பத்துக்கு ரூ.5.13 கோடி கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணன்: இது தவிர கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ரூ.7.63 கோடி சொத்து இருப்பதாகவும் அதில் ரூ.6.99 கோடிக்கு அசையா சொத்துகளும், ரூ.64 லட்சத்திற்கு அசையும் சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு எந்தவித கடனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டி.ஆர்.பாலு:ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் சொத்து மதிப்பு ரூ.45.71 கோடி என வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ரூ.5.51 கோடிக்கு அசையும் சொத்து, ரூ.40.21 கோடிக்கு அசையா சொத்து; ரூ.8.06 கோடிக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சௌமியா அன்புமணி: அதேபோல பாமக வேட்பாளரும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணிக்கு ரூ.48.18 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தனது கணவர் அன்புமணி ராமதாஸ் பெயரில் ரூ.6.85 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
அருண் நேரு: பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேருவுக்கு ரூ.46.20 கோடி சொத்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதில் கையிருப்பில் ரூ.2.14 லட்சம் ரொக்கமும், ரூ.27.11 கோடி முதலீடுகளிலும் செலுத்தியிருக்கிறார். இவருக்கு 7 வங்கி கணக்குகள் இருக்கின்றன. இது தவிர சுமார் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 480 கிராம் தங்கமும் வைத்திருக்கிறார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications