நிலம் ஒப்படைப்பு பட்டா.. நில ஒப்படை திட்டத்தில் 10 வருடம் தளர்வு கோரும் பெயிரா! முதல்வரிடம் கோரிக்கை
சென்னை: சாமானிய பொதுமக்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ள ஒப்படை நிலங்களை பராதீனம் செய்ய 30 ஆண்டுகள் என்கிற ஒப்படை நிபந்தனைகளை தளர்த்தி 10 ஆண்டுகள் என குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பெயிரா வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றையும எழுதியிருக்கிறார்.
டாக்டர் ஆ.ஹென்றி முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், "டாக்டர் கலைஞர் முதல்வராக இருந்த 2006 - 2011 காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் வீடற்ற மற்றும் நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலங்களையும், மனைகளையும் வழங்கும் வகையில், நிலம் ஒப்படை செய்யும் சிறப்புத் திட்டமானது தமிழக அரசால் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நிலங்கள் மனைகள் ஒதுக்கீடு
பொதுமக்களின் பேராதரவுடன் நில ஒப்படை திட்டம், வருவாய் நிலையாணை எண் 15 மற்றும் 21ன் கீழ் இலவச பட்டாக்கள் மூலம் 2007ம் ஆண்டு பொதுமக்கள் பெருமளவில் பயனடையும் வகையில் மாநிலம் முழுவதும் 2,12,946 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை மேற்கூறிய திட்டத்தின் வாயிலாக 1,78,576 எண்ணிக்கையிலான தகுதி வாய்ந்த நிலம் மற்றும் வீடற்ற ஏழை விவசாய குடும்பங்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர், நலிந்த சமூகத்தினர், விவசாயம் மட்டும் வீட்டு மனைகளுக்கான நிலம் தேவைப்படும் மற்ற தகுதி வாய்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்களுக்கு, 30 ஆண்டு காலம் பராதீனம் செய்யக்கூடாது என்கின்ற ஒப்படை நிபந்தனைகள் உள்ளிட்ட 18 ஒப்படை நிபந்தனைகள் அடிப்படையில் நிலங்களும் மனைகளும் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது.
ஒப்படை நிலங்கள் விற்பனை
மேலும் இத்திட்டத்தின் கீழ் நிலங்களைப் பெற்ற பயனாளிகள் பெரும்பாலானோர் இதனைக் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களாக உள்ளனர். ஒப்படை நிபந்தனைகள் தொடர்பாக வழங்கிய விதிகளில் குறிப்பிட்டுள்ள நான்காவது ஷரத்தின் படி, ஒப்படை நிலங்கள் 30 ஆண்டுகளுக்குள் விற்பனை செய்யவோ அல்லது பராதீனம் செய்யவும் கூடாது. மேலும் 30 ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை செய்யவும் அல்லது பராதீனம் செய்யவும் விரும்பும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியரிடம் முன் அனுமதியினை பெறப்பட வேண்டும் என்கின்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய நிபந்தனைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத ஏழை விவசாய பாமர மக்கள் பெரும்பாலானோர் தங்கள் பொருளாதார அத்தியாவசிய தேவைகளுக்காக வருவாய்த் துறையால் மேற்கண்ட ஒப்படை நிலங்களுக்கு வழங்கப்பட்ட கணினி பட்டாவின் அடிப்படையில் தங்களது நிலங்களையும், மனைகளையும் விற்பனை செய்துள்ளனர்.
நில ஒப்படை சிறப்பு திட்டம்
இந்நிலையில் நில ஒப்படை நிர்வாக ஆணையமானது நில ஒப்படை ஒப்பந்த நிபந்தனைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட நிலங்களுக்கான ஒதுக்கீட்டினை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன் காரணமாக நிலங்களை விற்ற ஏழை விவசாய மக்களும் அந்த நிலங்களை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் வாங்கிய பொதுமக்களும் தற்பொழுது பெரும் அவதிக்குள்ளாகி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக தமிழக அரசால் ஏற்கனவே வழங்கப்பட்ட நில ஒப்படை சிறப்பு திட்டம் பலவற்றில் நிபந்தனை காலம் 10 ஆண்டுகள் 12 ஆண்டுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
10 ஆண்டுகளாக மாற்றி அமைக்க வேண்டும்
ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர், ஏழை விவசாய மக்களின் நலனை கவனத்தில் கொண்டு, ஒப்படை நிலங்கள் விற்பனை அல்லது பராதீனம் செய்ய மேற்கண்ட நில ஒப்படை சிறப்பு திட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள 30 ஆண்டுகள் என நிர்ணயித்துள்ள நிபந்தனை காலத்தை (பொதுமக்களின் அவசியம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு அவர்கள் விற்பனை செய்யும் பொருட்டு) 10 ஆண்டுகளாக மாற்றி அமைக்க வேண்டும்.
மேலும், ஒப்படை நிபந்தனையின் நான்காவது ஷரத்தை மீறியதற்காக வருவாய்த் துறையால் ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை மறு ஆய்வு செய்து மீண்டும் அவர்களுக்கான நில ஒப்படையை உறுதி செய்தும், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தாங்கள் உரிய வழிவகை செய்ய வேண்டும்" என அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications