ஸ்டாலின் தோல்வியால் கலங்கிய விஜய்.. பனையூரில் நிர்வாகிகளிடம் சொன்னது என்ன?
சென்னை: சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்கு தேவைப்பட்ட 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. இதனால் மற்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக இரண்டாம் இடத்தை தான் பிடித்தது. கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தார். இது திமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்டாலினின் தோல்வியால் விஜய் வருந்தியதாக அவரின் ஜோதிடர் ராதன் பண்டிட் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத ட்விஸ்ட்கள் நடந்தன. தவெக தனிப்பெரும்பான்மை கட்சியாக வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை முயற்சியில் தவெக காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் ஈடுபட்டு வருகிறது. ஸ்டாலின் தோல்வி திமுகவினரை ரொம்பவே பாதித்தள்ளது. நேற்று கொளத்தூர் மக்களுக்கு அவர் நன்றி தெரிவிக்க சென்றபோது, சேகர்பாபு உள்ளிட்டோர் அழுதனர். இதை நினைத்து விஜய்யும் கலங்கியுள்ளாராம்.

ஸ்டாலின் தோல்வி
இதுகுறித்து ஜோதிடர் ராதன் பண்டிட் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே நான் பூங்கொத்து. சால்வையுடன் விஜய்க்கு வாழ்த்து சொல்ல சென்றேன். காலை 7.30 மணிக்கே அவரின் வீட்டிற்கு சென்றுவிட்டேன். ரிசல்ட் வெளியாவதற்கு முன்பாகவே நான் வாழ்த்து சொன்னேன். முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
மாலை 6 மணி வரை நான் விஜய்யுடன் வீட்டில் தான் இருந்தார். தொலைக்காட்சியில் செய்தி பார்த்து கொண்டிருந்தோம். கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வியடைந்த செய்தியையும் அவர் பார்த்தார். அதற்காக அவர் சந்தோசப்படவில்லை. அவரை வெற்றி பெற்றுவிட்டேன் என்று விஜய் எடுத்துக் கொள்ளவில்லை. மற்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பது தெரியவில்லை. விஜய் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.
விஜய் வருத்தம்
மிகவும் கேஷுவலாக கடந்து போனார். முதல்வர் ஸ்டாலின் தோல்வியடைந்தார் என்பதில் விஜய்க்கு வருத்தம் தான். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதில் அவருக்கு ஏமாற்றம் தான். ஆனால் இப்போதும் அவர் முதலமைச்சராக பதவியேற்க போகிறார். அவர் நினைத்ததை அடைந்துவிட்டார். ஊழல் இல்லாத நல்லாட்சியை அவர் நிச்சயம் வழங்குவார்" என்றார்.
-
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications