"ஜெயலலிதா உயிரோட இருக்க மாட்டாங்கனு கணித்தேன்! ஷாக்கான சி.பி.ராதாகிருஷ்ணன்!" விஜய் ஜோதிடர் பகீர்
சென்னை: அடுத்த பிறந்தநாளுக்கு நீங்கள் உயிருடன் இருக்க மாட்டீங்கன்னு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லியதாக விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார். விஜய்யின் வெற்றியை ராதன் கணித்து சொன்ன நிலையில் தற்போது அவர் வைரலாகி வருகிறார்.
இதுகுறித்து ஒரு சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் போன் செய்தேன். அப்போது 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாம் (அதிமுக) தோற்றுவிடலாம்.

ஏனென்றால் உங்கள் ஜாதகபடி நீங்கள் ஜெயித்ததும் இந்த வெற்றி நிலைக்காது. கெட்டதுதான் நடக்கும். எனவே ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் தேர்தலை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துமாறு சொன்னேன். அங்கிருந்த யாருமே நான் சொன்னதை கேட்கவில்லை.
144 தடை உத்தரவு எல்லாம் போட்டு ஜெயலலிதாவை இயற்கைக்கு எதிராகதான் ஜெயிக்க வைத்தார்கள். அப்போது நான் அடுத்த பிறந்தநாளில் (2017 பிப்ரவரி 24 ஆம் தேதி) நீங்கள் உயிருடன் இருக்க மாட்டீர்கள் என ஜெயலலிதாவிடமே சொன்னேன். அது போல் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனிடமும் நான் சொன்னேன். சைதை துரைசாமி, ஐசரி கணேஷ் என 500, 1000 பேரிடமாவது இந்த விஷயத்தை சொன்னேன். இவ்வாறு பகீர் தகவலை ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார்.
ராதன் பண்டிட், விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் மட்டுமல்லாமல், தவெகவின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்.
விஜய் 150 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வார் என்றும் வாக்கு எண்ணிக்கையின் போது காலை 9.15 மணிக்கெல்லாம் தவெக முன்னணியில் இருப்பது தெரியவரும் என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான விஜய் குறித்து கணிப்புகளை வெளியிட்டு வரும் ஜோதிடர் ராதன் பண்டிட் (Radhan Pandit), தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படுபவராக உள்ளார். அவரைப் பற்றிய முக்கிய தகவல்களை பார்க்கலாம்.
யார் இந்த ராதன் பண்டிட்?
இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடம், எண் கணிதம் (Numerology) மற்றும் தியானம் ஆகியவற்றில் அனுபவம் பெற்றவர்.
ஆரம்பத்தில் பண்டிட் வெற்றிவேல் என்று அழைக்கப்பட்ட இவர், 2008-ல் டெல்லிக்கு இடம்பெயர்ந்த பிறகு தனது பெயரை ராதன் பண்டிட் என மாற்றிக் கொண்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மீக ஆலோசகராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1991-ல் ஜெயலலிதாவின் வெற்றியை இவர் துல்லியமாகக் கணித்தவர்.
விஜய் குறித்த முக்கிய கணிப்புகள்: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூழலில், விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து இவர் வழங்கிய கணிப்புகள் வைரலாகி வருகின்றன:
சுனாமி ஜாதகம்: விஜய்யின் ஜாதகம் மிகவும் வலிமையானது என்றும், அது தமிழக அரசியலில் ஒரு "சுனாமி" போன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி கணிப்பு: 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 140 முதல் 170 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்கும் என்றும், விஜய் முதலமைச்சராவார் என்றும் இவர் கணித்துள்ளார்.
பெயர்ப் பொருத்தம்: 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியின் பெயர் விஜய்யின் பிறந்த தேதி மற்றும் எண் கணிதத்திற்கு மிகத் துல்லியமாகப் பொருந்துவதாக இவர் கூறுகிறார்.
ஆன்மீகப் பயணம்: விஜய் ஒரு தீவிரமான முருக பக்தர் என்றும், அவரது ஆட்சியில் தமிழகக் கோயில்கள் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும் என்றும் இவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலை: சமீபத்தில் (மே 2026), தேர்தல் முடிவுகளின் ஆரம்பகட்ட நிலவரங்கள் TVK-விற்கு சாதகமாக வந்தபோது, ராதன் பண்டிட் சென்னை நீலாங்கரையிலுள்ள விஜய்யின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.












Click it and Unblock the Notifications