ஆஹா.. அப்படியே புட்டு புட்டு வைக்குதே இந்த சாமி.. சொல்றது பூராவும் நடந்திருச்சுன்னா!
கிரிக்கெட் உலக கோப்பையை வெல்வது யார் என்ற ஜோதிடரின் வீடியோ வைரலாகிறது
Recommended Video
சென்னை: இந்த ஜோதிடர் கூறுவதைக் கேட்டால் அனேகமாக உலக கோப்பையை வெல்லப் போவது நியூசிலாந்து என்று தெரிகிறது. அட ஆமாங்க, இந்த ஜோதிடர் அப்படித்தான் சொல்லியிருக்கார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. இன்று 2வது அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து முட்டி மோதிக் கொண்டுள்ளனர்.
நேற்றுதான் அதிர்ச்சியான நாள். அதாவது இந்தியா, நியூசிலாந்து மோதியதில் இந்தியா வீரமாக போராடி தோல்வியைத் தழுவியது. இதனால் உலகக் கோப்பையைப் பார்க்கும் சுரத்தே இந்தியர்களிடம் குறைந்து விட்டது.

பெண் ஜோதிடர்
இந்த நிலையில்தான் ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அதில் தான் மேட்டரே இருக்கிறது. அதாவது அது ஒரு ஜோதிட நிகழ்ச்சி போல தெரிகிறது. ஒரு பெண் ஜோதிடரிடம் உலகக் கோப்பையை யார் வெல்வார்கள் என ஆரூடம் கேட்கிறார். நம்ம ஜோதிடரும் கணிப்புகளைக் கூறுகிறார்.

நியூசிலாந்து
ரொம்பக் கஷ்டம் என்று கூறியபடி பேச தொடங்கும் அவர் கேஷுவலாக சொல்லச் சொல்ல நமக்கு ஷாக் அடிக்கிறது. காரணம் நடந்ததை அப்படியே கூறினால் ஷாக் அடிக்காமல் என்ன செய்யும். அதாவது இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை அரை இறுதிக்கு வரும் என்று கூறுகிறார். உண்மையில் இதுதான் நடந்தது. இந்த அணிகள்தான் அரை இறுதிக்கு வந்தன.

இங்கிலாந்து
அடுத்து அவர் கூறுகையில், இறுதிப் போட்டியில் இந்த முறை புதியவர்கள் வெல்வார்கள். அதாவது நியூசிலாந்து வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். உண்மைதான் இதுவரை நியூசிலாந்து உலகக் கோப்பையை வெல்லவில்லை. அதேபோலத்தான் இங்கிலாந்தும் வென்றதில்லை. இருப்பினும் நியூசிலாந்து வெல்ல வாய்ப்புள்ளது. அந்த நாட்டு அணியின் கேன் வில்லியம்சான் தொடர் நாயகனாக வரலாம் என்றும் கூறி அதிர வைக்கிறார் அந்த ஜோதிடர்.
|
திக்.. திக்
இவர் சொன்னது போல நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் படு துல்லியமாக கணித்துக் கூறுவதாக இவர் கூறுவதைப் பார்த்தால்நடந்தாலும் நடக்கலாம் போலயே. எதுவா இருந்தாலும் போட்டி முடியட்டும். இப்பவே ரொம்ப திக்கு திக்குன்னு வருது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications