உள்ளே வந்துவிட்டார் கிங் மேக்கர்.. 83 வயதில் மோடிக்கு சவால்.. நாயுடு, நிதிஷிடம் பேசும் "சரத் பவார்"
சென்னை: சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் உடன் சரத் பவார் பேசி வருகிறாராம். பாஜக இல்லாத கூட்டணி ஆட்சியை அமைக்க இவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம்.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரை மகாராஷ்டிராவில் சரத் பவார் அரசியலில் நீடிப்பாரா? பாஜக என்ற மிகப்பெரிய பிம்பத்திற்கு முன் அவர் தாக்கு பிடிப்பாரா என்று கேள்விகள் எழுந்தது. ஏனென்றால் தேசியவாத காங்கிரஸ் உடைந்துவிட்டது. கட்சி இரண்டாக உடைந்து அஜித் பவார் அணி பாஜக கூட்டணிக்கு போய்விட்டது.

அப்படி இருக்க சரத் பவார் என்ன செய்வார் என்ற கேள்வி நிலவியது. ஆனால் அதை எல்லாம் குறித்து கவலைப்படாமல் தன்னுடைய விஷயங்களை மிக கவனமாக செய்து வந்தார். அவர் எங்குமே பாஜகவை குறித்து கவலைப்படவில்லை.
அடிப்படை விஷயங்களில் சரியாக இருங்கள். அதற்கு பின் நேரம் கிடைக்கும் போது பெரிய விஷயங்களை கவனிக்கலாம் என்பார்கள். அப்படித்தான் சரத் பவாரும், பாஜகவை வீழ்த்துவது குறித்து கவலைப்படாமல், சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 20+ இடங்களை வெல்ல மட்டும் குறி வைத்து களமிறங்கினார். இப்போது அவர் திட்டமிட்டபடியே 2024 லோக்சபா தேர்தல் முடிவுகளை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி வெறும் 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இதில் சரத் பாவரின் தேசியவாத காங்கிரஸ் மட்டும் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சரத் பவார் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பெரிய விஷயமான பாஜகவை நோக்கி தன் பார்வையை திருப்பாமல் உள்ளூர் அளவில் கிரவுண்ட் வேலைகளில் கவனம் செலுத்தினார். தோனி போல 40வது ஓவரில் கூட சரத் பவார் டொக் வைத்து ஆடிக்கொண்டு இருந்தார்.
மோடி போல பேன்சியாக பேசாமல் கிரவுண்டு வேலைகளை மட்டும் 83 வயதில் ஒருங்கிணைத்து மேற்கொண்டார்.அவரின் அரசியல் முதிர்ச்சி மற்றும் சாணக்கியத்தனம் இரண்டும்தான் இதற்கு காரணம்.
இதன் விளைவாக இப்போது மகாராஷ்டிராவில் பாஜக மண்ணை கவ்வி உள்ளது. 2024 லோக்சபா தேர்தல் முடிவுகளை மகாராஷ்டிராதான் பெரிய அளவில் தீர்மானிக்க போகிறது. இங்கே பாஜக கடந்த முறைபோல இடங்களை வெல்லவில்லை என்றால் தேசிய அளவிலும் அந்த கட்சிக்கு வெகுவாக இடங்கள் குறையும் வாய்ப்புகள் உள்ளன. அங்க பாஜக தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
ஆலோசனை; இப்படிப்பட்ட நிலையில்தான் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் உடன் சரத் பவார் பேசி வருகிறாராம். பாஜக இல்லாத கூட்டணி ஆட்சியை அமைக்க இவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம்.
2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் என்டிஏ கூட்டணிகள் உதவியுடன் ஆட்சி அமைக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம். இந்த நிலையில்தான் தெலுங்கு தேசம் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி திடீரென போன் செய்துள்ளார்.
அவரிடம் போன் செய்து ஆட்சி அமைப்பது தொடர்பாக மோடி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தெலுங்கு தேசம் அல்லது ஜேடியூ வெற்றியாளர்களை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை உணர்ந்தே பிரதமர் மோடி நேற்று நிதிஷ் குமாரை சந்தித்தார்.
மோடி - நிதிஷ் குமார் இடையே ஆலோசனை நடந்தது. நிதிஷ் குமார் பாஜக கூட்டணிக்கு வரும் முன் இந்தியா கூட்டணியில் இருந்தவர். சமீபத்தில்தான் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்தார்.
இப்போது சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் உடன் சரத் பவார் பேசி வருகிறாராம். பாஜக இல்லாத கூட்டணி ஆட்சியை அமைக்க இவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம் இந்தியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என உறுதியளித்ததாகச் சொல்லப்படுகிறது,. தெலுங்கு தேசம் இந்தியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு இல்லாமல் பிரதமர் பதவியும் வழங்க சந்திர பாபு நாயுடுவிற்கு தூது அனுப்பப்பட்டு உள்ளதாம்.
உதவி தேவை ; இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. தனி மெஜாரிட்டி பெற பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் இன்னும் கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது. பாஜகவிற்கு தனியாக மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் ஆட்சி அமைப்பது கடினம். ஏனென்றால் மோடி பிரதமர் ஆவதற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்காமல் போகலாம்.
உதாரணமாக நிதிஷ் குமாரின் ஜேடியூ பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்தில் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இவர்கள் என்டிஏ கூட்டணிதான்.
ஆனாலும் மோடியுடன் அத்தனை நெருக்கம் இல்லை. பாஜகவை ஆதரித்தாலும் மோடியை தனிப்பட்ட வகையில் கடுமையாக எதிர்க்க கூடியவர்கள். சந்திரபாபுநாயுடு எல்லாம் ஒரு காலத்தில் கடுமையாக மோடியை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications