சரியாக மதியம் 1 மணிக்கு அறிவாலய வாசலில் கருணாநிதி! உதயநிதியை அட்டக்கத்தி விஜயோடு ஒப்பிடுவதா: பிரபலம்
சென்னை: உதயநிதி ஸ்டாலினை விஜய்யுடன் ஒப்பிடுவது அபத்தமானது என்கிறார் பத்திரிகையாளர் சுபைர்.. சேப்பாக்கத்தில் எல்லாருடைய வீடுகளின் நிகழ்ச்சிகளுக்கும் உதயநிதி செல்கிறார்.. எல்லாருடனும் இணக்கமாகவும் உள்ளார்.. பாதுகாப்பு வளையம் எதுவுமே இல்லாமல், மக்களோடு மக்களாக உள்ளார்.. அந்தவகையில் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக வெற்றி பெற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என்றும் ஒரு பேட்டியில் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
Aagayam Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர், திமுக இந்த நாலரை ஆண்டுகளில், ஒரு சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாகவே உள்ளது.. வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்..

சேப்பாக்கம் தொகுதி
காரணம் அவரது செயல்பாடு அந்த அளவுக்கு வீரியம் மிக்கதாக உள்ளது.. வாரிசு அரசியல் என்று பலர் விமர்சனம் செய்தாலும், தன்னுடைய தொகுதிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.. சேப்பாக்கத்தில் எல்லாருடைய வீடுகளிலும் உதயநிதியின் செல்போன் நம்பர் உள்ளது..
அவர்கள் எல்லாருடைய வீடுகளின் நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார்.. எல்லாருடனும் இணக்கமாகவும் உள்ளார்.. பாதுகாப்பு வளையம் எதுவுமே இல்லாமல், மக்களோடு மக்களாக உள்ளார்.. அந்தவகையில் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக வெற்றி பெற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
அட்டகத்தி விஜய்
விஜய் என்ற அட்டக்கத்தியை, ரியல் கத்தியான உதயநிதியுடன் ஒப்பிட்டு ஒரு நரேஷன் செட் செய்கிறார்கள்.. மக்களுடன் மக்களுக்காகவே களத்தில் இருக்கக்கூடிய நபரும், மாதம் ஒருமுறை வெளியே வரக்கூடிய நபரும் ஒன்றா? உதயநிதியை எளிதாக யார் வேண்டுமானாலும் அணுகலாம்..
துணிவு, ஆற்றல், செயல்படுத்தும் முறை என இந்த மூன்றிலுமே உதயநிதியை பொருத்தி பார்க்கலாம்.. உதயநிதி பேசிய சனாதன விஷயமானது, இந்தியா முழுவதும் விவாதத்தை கிளப்பியது.. ஆனால் தான் பேசிய பேச்சில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.. இதுதான் தலைமை பண்பு.. மற்றவர்கள்போல மனிதர்கள் இறந்ததுமே பின்வாங்கி ஓடவில்லை..
உதயநிதியின் திறன்மிக்க செயல்பாடு
அதேபோல உதயநிதி இதுவரை யாரையுமே கடிந்து பேசியதில்லை.. எந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போதும் தவறாக பேசியதில்லை.. யாரையுமே காயப்படுத்தியதில்லை.. தான் சார்ந்த துறை, தான் சார்ந்த தொகுதியை இப்போது வரை சிறப்பாக வைத்துள்ளார். இந்த பண்புகளில் ஏதாவது ஒன்று விஜய்யிடம் உள்ளதா?
விஜய் பார்ப்பதற்கே கூட்டம் சேருகிறது, ஆனால் உதயநிதியை பார்க்க கூட்டம் முண்டியடிப்பதில்லை என்கிறார்கள்.. இதுதான் ஒரு தலைவனுக்கும், நடிகருக்கும் உள்ள வித்தியாசம். ஒரு தலைவராக உதயநிதியை மக்கள் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். எளிதில் அணுகக்கூடியவனே தலைவனாக இருக்க முடியும்.
பார்ப்பார்கள் - ஓட்டு கிடையாது
விஜய்யை "பார்ப்பார்கள்".. ஆனால் ஓட்டுப்போட மாட்டார்கள்.. உதயநிதிக்கு கூட்டம் சேராது, ஆனால் ஓட்டு விழும்.. எனவே விஜய் வெறும் காட்சி பொருளாகவே இன்றும் இருக்கிறார்..
இதுவரை செய்தியாளர்களை சந்திக்காத விஜய்யை, எப்படி உதயநிதியுடன் ஒப்பிடலாம்? எதுக்காக நாங்கள் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும்? என்று விஜய் கட்சியினர் கேட்கிறார்கள்.. அதனால்தான் அவர்களை தற்குறி என்று பலரும் விமர்சிக்கிறார்கள்..
கலைஞர் கருணாநிதியின் பேட்டி
பத்திரிகையாளர் சந்திப்பு என்பது ஒரு ஜீவனுள்ள விஷயம்.. தினந்தோறும் கலைஞர் கருணாநிதி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். மதியம் 1 மணிக்கு சாப்பிட கிளம்புவார் கலைஞர்..
அப்போது சரியாக 1 மணிக்கு அறிவாலயம் வாசலில் பத்திரிகையாளர்கள் கலைஞரின் பேட்டிக்காக காத்திருப்பார்கள்.. 1 மணிக்கு பேட்டி தந்தால் 1.30 மணி செய்திக்கு அது ஒளிபரப்பாகும் என்பதை அறிந்துதான், நேரம் தவறாமல் பேட்டியை தந்துவிடுவார் கலைஞர்.
தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்த ஒரே தலைவர் கலைஞர்தான்.. அவரிடம் என்ன கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம்.. அப்படிப்பட்ட தலைவரை சந்தித்த மாநிலம் இது.. அப்படியிருக்கும்போது பத்திரிகையாளர்களை நாங்கள் ஏன் சந்திக்க வேண்டும்? என்று விஜய் கட்சியினர் கேட்கிறார்கள்.. எழுதி வெச்ச பேப்பரையே தப்பா படிக்கிற தலைவன் இருக்கும் கட்சியில் வேறு எப்படி இருப்பார்கள்?" என்றெல்லாம் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications