மாதம் ரூ.376 கட்டினால்.. ரூ.8.5 லட்சம் அள்ளலாம்.. போஸ்ட் ஆபீஸ் பென்ஷன் திட்டத்தில் இவ்வளவு பலன்களா?
சென்னை: ஓய்வூதியதாரர்களின் நிதிப்பாதுகாப்பை வழங்கக்கூடிய, அடல் ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பியல்புகள் என்னென்ன தெரியுமா? நெல்லை பாளையங்கோட்டை தலைமைத் தபால் நிலையத்தில் அஞ்சலக காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் தந்துள்ள விளக்கம் என்னென தெரியுமா?
பொதுமக்களின் வசதிக்காக மத்திய அரசு எத்தனையோ வசதிகளையும், சலுகைகளையும் அறிமுகம் செய்துள்ளது.. அதில் மிக முக்கியமானது மட்டுமல்லாமல், அத்தியாவசியமானது, சிறு சேமிப்பு திட்டங்கள் என்பதை மறுக்க முடியாது.

இந்த திட்டங்கள் பாதுகாப்பானவை, அதிக வட்டி தரக்கூடியவை, அரசு அங்கீகாரம் பெற்றிருப்பவை, சேமிப்பும் பாதுகாப்பாக உள்ளதால்தான், இந்த சிறுசேமிப்பு திட்டங்களை பொதுமக்கள் அதிகம் நாடி வருகிறார்கள்.
ஓய்வூதியதாரர்கள்: அந்தவகையில், ஓய்வூதியதாரர்களுக்காகவே கொண்டுவந்துள்ள திட்டம்தான், அடல் பென்ஷன் யோஜனா திட்டமாகும்.. இதுவரை 7 கோடிக்கும் அதிகமான நபர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளார்கள். இந்த திட்டமானது, வயதானவர்களுக்கு, பொருளாதார பாதுகாப்பை வழங்கக்கூடிய உத்தரவாதமான திட்டமாகும். வயதான காலத்தில் மாதந்தோறும் நல்ல வருமானமும் தரக்கூடியது..
கடந்த வாரம், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் தரப்பில் அடல் ஓய்வூதியத் திட்டம், கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் பேசியதன் சுருக்கம்தான் இது:
ஓய்வூதியம்: "அடல் ஓய்வூதியத் திட்டத்தில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை செலுத்தி வந்தால் 60 வயது முதல் குறிப்பிட்ட தொகை மாத ஓய்வூதியமாகக் கிடைக்கும். 25 வயதில் சேர்ந்தால் மாதம் தோறும் 376 ரூபாய் 35 ஆண்டுகள் செலுத்த வேண்டும்..
30 வயதில் சேர்ந்தால் மாதந்தோறும் 577 ரூபாய் 30 ஆண்டுகள் செலுத்த வேண்டும்.. 35 வயதில் சேர்ந்தால் மாதம் தோறும் 902 ரூபாய் 25 வருடங்கள் செலுத்த வேண்டும் 40 வயதில் சேர்ந்தால் மாதந்தோறும் 1454 ரூபாய் 20 வருடங்கள் செலுத்த வேண்டும்.. பாலிசிதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணைக்கு மாத ஓய்வூதியமாக 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் அல்லது பாலிசிதாரரின் வாரிசுக்கு 8.5 லட்சம் கிடைக்கும்.
பிரிமியம் தொகை: செலுத்தப்படும் தொகையை பொறுத்து கணக்குதாரரின் சேமிப்பு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1000 முதல் 5000 வரை கிடைக்கும். பிரிமியத் தொகை கணக்குதாரரின் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் வசதி மூலம் செலுத்தப்படும்.. 18 வயது முதல் 40 வயதுடைய எந்த ஒரு நபரும் ஒரு அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு மூலம் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் Rural Postal Life Insurance குறைந்த பிரிமியம், அதிக போனஸ் ஆகும். குறைந்த பட்ச பாலிசி தொகை ரூ.10,000 அதிகபட்சம் 10,00,000. வயது வரம்பு 19 முதல் 55 வரை. பாலிசி ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஆயுள் காப்பீடு வசதி, மாத மாதம் அல்லது 3 மாதத்திற்கு 1 முறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை அல்லது 12 மாதத்திற்கு ஒருமுறை பிரிமியம் செலுத்தும் வசதி உண்டு. பிரிமிய தொகையை பதிவு செய்ய கணக்கு புத்தக வசதி. வருமான வரிச்சட்டம் பிரிவு 80Cன் கீழ் வருமான வரி விலக்கும் உண்டு.
சேவைகள்: கம்ப்யூட்டர் சேவை, கடன் வசதி, குறைந்த வட்டி, அசலை தவணை முறையில் திருப்பி செலுத்தும் வசதி, கடனுக்கு வட்டி செலுத்த தனி கடன் ரசீது புத்தகம், தாங்கள் விரும்பும் தபால் அலுவலகத்திலேயே பிரிமியம் செலுத்தும் வசதி, கிராமிய மக்களின் நலனுக்காக அஞ்சல் துறையினரால் செயல்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பான அற்புதமான திட்டம் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத்திட்டம்" என்று தெரிவித்திருந்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications