தர்மபுரியில் டுவிஸ்ட்.. மதுக்கடை வேணாம்.. ரூ.100 தந்து எங்களை அப்படி சொல்ல சொன்னாங்க: பெண்கள் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக்கை திறக்க கோரி தருமபுரியில் பெண்களே ஒன்றுசேர்ந்து கோரிக்கை விடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, வருகிற 15ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ல் அப்போதைய மின்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி சட்டசபையில் பேசும்போது, "திமுக தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகள் மூடுவது தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் திமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லவில்லை" என்று கூறியிருந்தார்.

Dharmapuri Tasmac shop

ஆனால், எதிர்க்கட்சிகளோ, திமுக வாக்குறுதியில் சொன்னபடி, மதுக்கடைகளை மூடவில்லை என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். நேற்றுமுன்தினம்கூட, புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்றார்கள். ஆனால், இப்போது தனியார் மதுபான பார்களையும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.. இதுதான் திமுக சாதனை" என்று கூறியிருந்தார்.

திமுக அரசு: அந்தவகையில், மதுக்கடைகள் குறித்த சலசலப்புகள், தமிழக அரசியல் கட்சிகளிடம் தொடர்ந்து வருகின்றன.. மற்றொருபக்கம் மதுவிலக்கு என்பதும் கனவாகவே கலைந்து, காற்றோடு கரைந்தும் போய் கொண்டிருக்கிறது.

மாறாக, டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழக அரசுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டி கொண்டிருக்கிறது.. அரசின் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருவதாக தெரிகிறது. அதாவது தமிழகத்தில் 4829 மதுக்கடைகள் மூலம், வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது.

மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு நேரங்களில், பலமுறை பெண்களே ஒன்றுகூடி போராட்டத்தை தமிழகத்தில் நடத்தியிருக்கிறார்கள்.. ஆனால், நேற்றைய தினம் திடீரென ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துவிட்டது.

கலெக்டரிடம் மனு: தர்மபுரி மாவட்டத்தில், நலப்பரம் பட்டி, கெட்டூர், பலஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராம மக்கள், தங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தங்கள் பகுதியில் இருந்து 20 கி.மீ சென்றுதான் மதுபானங்களை வாங்க வேண்டியிருக்கிறது, எனவே தங்களுக்கு டாஸ்மாக் கடை வேண்டும்.. சட்டவிரோதமாக விற்கப்படும் மதுவை அதிக விலை கொடுத்து வாங்குவதால், உழைத்த பணம் செலவழிந்து விடுவதாகவும், கள்ளச்சாராயம் உள்ளிட்ட பிற போதையை மக்கள் நாடாத வகையில் தங்கள் பகுதியிலேயே டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்" என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கிராம மக்கள்: மதுக்கடை வேண்டும் என பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவம் வினோதத்தை ஏற்படுத்தியது... அத்துடன் பேசுபொருளாகவும் உருவெடுத்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்றைய தினம், கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்ற பெண்கள், இன்று செய்தியாளர்களிடம் பேசினாரகள்.. அப்போது, "எந்த போராட்டத்திற்கு போகிறோம் என்று கூட தெரியாமல்தான் கிளம்பி போனோம்.. தலைக்கு ரூ.300 கொடுத்து எங்களை போராட்டத்திற்கு அழைத்து கொண்டு போனார்கள்.. கலெக்டர் ஆபீஸுக்கு போனபிறகுதான், போராட்டம் பற்றி தெரிந்தது... போராட்டத்திற்கு அழைத்து சென்றவர்கள்தான், "டாஸ்மாக் கடை வேணும்னு" எங்களை சொல்ல சொன்னாங்க.. அவங்க சொல்லி தந்தது போலவே நாங்களும் சொன்னோம்

பரபரப்பு: இதுவரைக்கும் நாங்கள் எந்த மீட்டிங்குக்கும் போனதில்லை.. இதுதான் முதல்முறை.. நாங்க சொன்னதை கேட்டுட்டு, எல்லாரும் எங்களை திட்டறாங்க.. அதான் எங்களுக்கு டாஸ்மாக் கடை வேணாம்னு இப்ப சொல்லிட்டோம்" என்று பேட்டி தந்திருக்கிறார்கள். இந்த பேட்டிதான் மீண்டும் பரபரப்பை கிளப்பிவிட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+