சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் பைக் ஓட்ட கூப்பிட்டாங்க.. மாதம் ரூ1 லட்சம் சம்பளம்.. ஏடிஎம் கொள்ளையனின் பகீர் வாக்குமூலம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பைக் ஓட்டினால் மாதம் ரூ 1 லட்சம் ஊதியம் தருவதாக அழைத்ததாக ஏடிஎம் கொள்ளையர்களில் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Recommended Video

    Chennai-ஐ குறி வைத்த Mewat Gang | Chennai ATM Robbery Explained | Oneindia Tamil

    சென்னையில் செனாய் நகர், வடபழனி, பெரம்பூர், ராமாபுரம், பெரியமேடு, கீழ்ப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட 18 இடங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களில் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நூதன கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இந்த கொள்ளையை வடமாநில இளைஞர்கள் நடத்தியதாக போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    ஜூலை 19 முதல் குளிர்கால கூட்டத்தொடர்.. வேக்சின் போட்ட 90% எம்பிகள்.. தடுப்பூசி போடாத ராகுல்.. ஏன்?ஜூலை 19 முதல் குளிர்கால கூட்டத்தொடர்.. வேக்சின் போட்ட 90% எம்பிகள்.. தடுப்பூசி போடாத ராகுல்.. ஏன்?

    வழக்கு

    வழக்கு

    இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் 15 ஏடிஎம் மையங்களில் ரூ 50 லட்சம் கொள்ளை போனது. 30க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களில் ரூ 1 கோடிக்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இருவர் கைது

    இருவர் கைது

    இதுவரை சென்னையில் மட்டும் 16 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனிப்படை போலீஸார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அர்ஷ், அவரது கூட்டாளி வீரேந்திர ராவத், நஜீம் உசேன் ஆகியோரை கைது செய்தனர்.

    தொழில்நுட்பங்கள்

    தொழில்நுட்பங்கள்

    இந்த நிலையில் வீரேந்திர ராவத்திடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றனர். அதில் தமிழகம் வந்து பைக் ஓட்டினால் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் தருவதாக அமீர் கூறினார். நான் 7ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள தொழில்நுட்பங்கள் ஏதும் தெரியாது.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    இதற்கு முன்னர் பிளம்பராக வேலை பார்த்து வந்ததாகவும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை வந்ததும் அமீர் கையில் பல லட்சங்கள் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்ததும் வீரேந்திர ராவத், தனக்கு கூடுதலாக பணம் வேண்டும் என கேட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    English summary
    ATM robberer says that he was given Rs 1 lakh as salary for riding bike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X