தமிழகத்தில் மழை பெய்ய போகுது... பனி குறைய போகுது
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கே, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், வளிமண்டலத்தை கடக்கும் மேக கூட்டங்களால், 25ம் தேதி, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என, கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சமாக உதகையில் 4.2 டிகிரி செல்சியஸ், வால்பாறை பகுதிகளில் 6 டிகிரி செல்சியஸ் கொடைக்கானல் பகுதியில் 10.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது.
சென்னையை பொறுத்து வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications