பட்டப் பகலில் சென்னையில் ஷாக்.. பள்ளி மாணவியை ஆட்டோவில் கடத்த முயற்சி.. குதித்து தப்பி.. பரபரப்பு
சென்னை : சென்னை புது வண்ணாரப்பேட்டை அருகே, ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவியை, ஆட்டோவில் இருந்தவர்கள் கடத்த முயன்ற நிலையில், ஓடும் ஆட்டோவில் இருந்து மாணவி கீழே குதித்து தப்பிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னை கிராஸ்ரோடூ சாலை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வழக்கம் போல் இன்று அந்த மாணவி பள்ளி செல்வதற்ககாக ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கெனவே 25 வயது மதிக்கதக்க இரு நபர்கள் பயணம் செய்து வந்துள்ளனர். அந்த நபர்கள், டோல்கெட்டில் இருந்து தங்கசாலை செல்வதற்காக பயணித்து வந்ததாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவியை கடத்த முயற்சி
புதுவண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கியபோது, ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவியை, கைகுட்டை வாயில் வைத்து மூடி, அவர்கள் மாணவியை கடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த மாணவி, தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில், ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், மாணவியின் மூக்கு, தாடை போன்ற பகுதிகளில் சிறு காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், கீழே விழுந்து கிடந்த மாணவியை தூக்க முற்பட்ட நேரத்தில், ஆட்டோவில் இருந்த அந்த மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். சென்னையின் பரபரப்பான பகுதியில், பட்டப்பகலில் ஓடும் ஆட்டோவில் இருந்து பள்ளி மாணவி கீழே விழுந்ததால், சாலையில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
காயமடைந்த மாணவிக்கு முதலுதவி
உடனடியாக அங்கு கூடிய மக்கள், இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலிசார் மாணவியை மீட்டனர். பின்னர், காயமடைந்த மாணவிக்கு முதலுதவி அளிக்கும் வகையில், அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் விசாரணை
சிகிச்சை அளிக்கபட்டதையடுத்து அந்த மாணவியிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுநரான சார்லஸிடமும், போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோவில் கடத்திய நபர்கள் யார்? எதற்காக பள்ளி மாணவியை கடத்தினார்கள்? இதற்கு வேரேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையின் பரபரப்பாக மக்கள் நெருக்கமாக காணப்படும் புதுவண்ணாரப்பேட்டையில், பட்டப் பகலில் மாணவி கடத்தப்பட்ட சம்பவத்ததால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படக் காட்சிகள் போன்று, ஓடும் ஆட்டோவில் மாணவியை, மர்ம நபர்கள் கடத்த முயன்றபோது, ஓடும் ஆட்டோவில் இருந்து பள்ளி மாணவி குதித்து தப்பித்த சம்பவம், புதுவண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications