அம்பத்தூர் நகைக் கடைகளில் தங்க நகைக்கு பதில் கவரிங் நகையை மாற்றி வைத்து திருட முயற்சி
சென்னை: சென்னை அம்பத்தூர் புதூரில் நகைக் கடைகளில் தங்க நகையை எடுத்துக்கொண்டு கௌரி நகையை மாற்றி வைத்து திருட முயற்சி நடந்துள்ளது. ஆனால் கவரிங் நகையை மாற்றி வைக்க முயற்சி செய்தவரை ஊழியர்கள், பொதுமக்கள் மடக்கி பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வெளியாகி உள்ளது. அந்த வீடியோ பற்றி பார்ப்போம்.
தங்க நகைக்கு பதில கவரிங் நகையை மாற்றி வைத்து திருட முயற்சிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. ஆனால் திருடினாலும்,திருட முயற்சி செய்தாலும், சிசிடிவி கேமராக்கள் உள்ளதால் திருடர்களை மாட்டிக்கொள்வார்கள். திருடிவிட்டி தப்பி சென்றாலும், திருட முயன்றாலும் சரி, அவர்களின் முக அடையாளம் தெளிவாக தெரியும் என்பதால், எங்கு தப்பி ஓடினாலும் போலீசார் பிடித்து விடுவார்கள். அப்படி பலர் சென்னை நகைக்கடைகளில் திருட முயன்று சிக்கி உள்ளனர்.நகைக்கடையில் திருட முயன்ற பெண்கள் மற்றும் ஆண்கள் அவ்வப்போது கைதாகியும் வருகிறார்கள். அந்த வகையில் சென்னை அம்பத்தூரில் ஒருவர் கைதாகி உள்ளார்.

அம்பத்தூர் கே.கே.நகர் ரோடு, சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அம்பத்தூர் புதூர் பகுதியில் உள்ள பிரபல நகைக் கடைக்கு நகைகள் வாங்குவது போல் சென்றுள்ளார். அப்போது கடை ஊழியர்களிடம் இருந்து அசல் தங்க நகைகளை வாங்குவது போல் நடித்து யாரும் கவனிக்காத நேரத்தில் அசல் தங்க நகைகளுக்கு பதிலாக தன்னிடம் வைத்திருந்த போலி கவரிங் நகைகளை மாற்றி வைத்து திருட முயன்றுள்ளார்.
இதேபோல் அடுத்தடுத்து இரண்டு நகைக் கடைகளில் ஒரே பாணியில் திருட முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என நகைக்கடை உரிமையாளர் வெளியான சிசிடிவி காட்சி வீடியோயோவை பார்த்து கூறினார். இதனால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் அவரை கண்காணித்துள்ளனர். அவரை அடையாளம் கண்ட நகைக்கடையின் உரிமையாளர் அவரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில், நகை கடையில் இருந்து செல்வம் தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார்.
அந்த நேரத்தில் நகைக்கடை ஊழியர் மற்றும் நகை வாங்க வந்திருந்த சிலர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரை அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் புதூர் போலீசார் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர் இதற்கு முன்பு இதேபோன்று வேறு நகைக் கடைகளில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளாரா? அவருடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு நகைக் கடைகளில் ஒரே பாணியில் திருட முயன்ற சம்பவம் அம்பத்தூர் புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
