கோவிலை காண்பித்து இந்தி பேசும் மக்களை திசை திருப்ப பார்க்கிறது பாஜக.. தாக்கி பேசிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கோவிலை காண்பித்து இந்தி பேசும் மக்களை பாஜக திசை திருப்ப பார்க்கிறது. கொரோனா காலத்தில் கூட மக்களை அலைய வைத்தது பாஜக அரசு. கொரோனாவை விட கொடியவர்கள் பாஜகவினர் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.
சென்னையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- மொழிப்போர் தியாகிகள் நம்மை வழிநடத்துகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழகத்தில் தமிழ் ஆட்சி தொடங்கியது. இந்தி பேசும் மாநிலங்களுக்கு கூட பாஜக எதையும் செய்யவில்லை. இந்த முறை வடமாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற முடியாது.

பாஜவின் இந்த ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோவிலை காண்பித்து இந்தி பேசும் மக்களை பாஜக திசை திருப்ப பார்க்கிறது. கொரோனா காலத்தில் கூட மக்களை அலைய வைத்தது பாஜக அரசு. இதனால் தான் சொல்கிறோம்.. கொரோனாவை விட கொடியவர்கள் பாஜகவினர். இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது.
உலகம் முழுவதும் தமிழர்கள் வலம் வர காரணம் இரு மொழி கொள்கையே. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் உயர் கல்வித் துறையில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விட்டவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ் மொழியை புறக்கணித்து இந்திய மொழியை திணிக்க உதவியவர் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு அவர் பேசினார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications