சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து போலீஸ் செய்த புது விஷயம்.. வாகன ஓட்டிகள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஜிஎஸ்டி சாலை எப்போதுமே போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும் சாலையாகும். மொத்த சென்னையிலுமே ஒப்பிட்டு பார்த்தால், தாம்பரம் முதல் கிண்டி வரை உள்ள ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் அதிகமாகும். இதனை குறைக்கும் விதமாக ஆலந்தூர் பகுதியில் புதிய யூடர்ன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யூடர்ன் காரணமாக வாகனங்கள் நெரிசல் இன்றி செல்லும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

சென்னையில் ஒரு காலத்தில் அண்ணா சாலையில் தான் வாகன நெரிசல் மிக மிக அதிகமாக இருக்கும். அதன்பிறகு கோயம்பேடு வடபழனி சாலையில் நெரிசல் அதிகமாக இருந்தது. இதேபோல் ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலையிலும், ரேடியல் சாலையிலும், வேளச்சேரி சாலையிலும், பூந்தமல்லி சாலையிலும், ஆற்காடு சாலையிலும் நெரிசல் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சாலைகளையும் விட ஜிஎஸ்டி சாலையில் தான் நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும்.

Chennai traffic gst road

10 நிமிடம் ஜிஎஸ்டி சாலை நெரிசலால் முடங்கினால், தாம்பரம் முதல் கத்திரப்பாரா வரை ஸ்தம்பித்து போய்விடும்.. ஏனெனில் எல்லா சாலைகளும் திருச்சி சாலையை தொட ஜிஎஸ்டி சாலையில் தான் வந்து சேர வேண்டும். ஓஎம்ஆர், ஈசிஆர் என எந்த பக்கம் இருந்து திருச்சி நோக்கி பயணிக்க வேண்டும் என்றாலும் ஜிஎஸ்டி சாலைக்கு தான் வர வேண்டும்.

ஜிஎஸ்டி சாலையில் மழைக்காலத்தில் சென்றால், குறிப்பிட்ட நேரத்தில் தாம்பரத்திற்கோ, கிளாம்பாக்கத்திற்கோ, விமான நிலையத்திற்கோ போக முடியாது.. 10 நிமிடம் முன்பு கிளம்பினால் போதும் என்று நினைத்து வந்த பலர் இன்று வரை விமானத்தை, ரயிலை, பேருந்துகளை தவறவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் அந்த அளவிற்கு நெரிசல் மிகுந்த இடமாக மாறிவிடும்.

இதில் மிக குறுகலான பகுதி என்றால் இதில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை இணைக்கும் பகுதியான ஆலந்தூர் சந்திப்பு தான், அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் அங்கு மாற்றுத் தீர்வுகளை சென்னை மாநகர போலீசார் முன் வைத்துள்ளனர். அதன்படி ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் தபால் நிலையம் அருகே யூடர்ன் வைத்துள்ளனர். இதன்படி, கிண்டி நோக்கி செல்பவர்கள் இங்கு யூடர்ன் செய்து பயணிக்கலாம். இது பற்றி சென்னை போக்குவரத்து போலீசார் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+