13 நாட்கள் விடுமுறை.. ஆகஸ்ட் மாதத்துக்கான வங்கிகளின் லீவு அட்டவணை வெளியீடு.. மக்களே நோட் பண்ணுங்க
சென்னை: ஆகஸ்ட் மாதம் நேற்று முன்தினம் பிறந்துள்ளது. இந்நிலையில் தான் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் விடுமுறை தினத்தை கவனத்தில் கொண்டு தங்களின் வங்கிகள் சார்ந்த திட்டத்தை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும்.
ஆகஸ்ட்.. ஆங்கில மாதத்தின் 8 வது இடத்தில் இருக்கும் இந்த மாதம் நம் நாட்டை பொறுத்தவரை மிகவும் முக்கியமான நாளாகும். ஏனென்றால் 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தான் நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம். இதனால் வரலாற்றில் ஆகஸ்ட் மாதம் என்றுமே மறக்க முடியாத ஒன்றாகும்.

அதேபோல் இந்த மாதம் என்பது நம் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மழைக்காலமாகும். விவசாய பணிகளை தொடங்கும் காலமாகவும் இந்த மாதம் உள்ளது. இதுதவிர ஆகஸ்ட் மாதத்துக்கு இன்னொரு சிறப்பு உண்டு. அதாவது ஏராளமான அரசு விடுமுறைகள் இந்த மாதத்தில் வரும்.
இந்நிலையில் தான் 2024 ஆகஸ்ட் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி 13 நாட்கள் வங்கிகள் மூடப்பட உள்ளது. பொது விடுமுறை நாட்களை தவிர மற்ற சனிக்கிழமைகளில் வங்கிக் கிளைகள் திறந்திருக்கும். மாறாக 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வங்கிகள் செயல்படாது.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் 13 நாள் விடுமுறை நாட்களின் விபரம் வருமாறு: ஆகஸ்ட் 3- கேர் பூஜை (அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை), ஆகஸ்ட் 4- ஞாயிறு விடுமுறை, ஆகஸ்ட் 8- டெண்டாங் லோ ரம் பாத் (சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை), ஆகஸ்ட் 10 - இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை, ஆகஸ்ட் 11- ஞாயிறு விடுமுறை, ஆகஸ்ட் 13- தேசபக்தர் தினம் (இம்பாலில் வங்கிகளுக்கு விடுமுறை), ஆகஸ்ட் 15- சுதந்திர தின விடுமுறையாகும்.
அதேபோல் ஆகஸ்ட் 18- ஞாயிறு விடுமுறை, ஆகஸ்ட் 19- ரக்சா பந்தன் (திரிபுரா, குஜராத், ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை), ஆகஸ்ட் 20- ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (கொச்சியில் வங்கிகளுக்கு விடுமுறை), ஆகஸ்ட் 24- நான்காவது சனிக்கிழமை விடுமுறை, ஆகஸ்ட் 25- ஞாயிறு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 26- கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தில் குஜராத், ஒடிசா, சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதனால் பொதுமக்கள் விடுமுறை தினத்தை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications