Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய நல்ல நாளுக்காக காத்திருக்கும் வேட்பாளர்கள்

நல்ல காரியம் செய்யும் முன்பாக நல்ல நேரம் பார்ப்பார்கள். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நல்ல நாள் நல்ல நேரம் பார்க்க ஆரம்பித்து விட்டனர். கவுன்சிலர்,நகர்மன்றத்தலைவர், மேயர், துணைமேயர் கனவுகளில் மிதக்கும் வேட்பாளர்கள் பலரும் கோவில் கோவிலாக சென்று கடவுளை வேண்டிக்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆ தேதி நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 4ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.

திமுக பேச்சுவார்த்தை

திமுக பேச்சுவார்த்தை

தி.மு.க சார்பில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. மாவட்ட அளவில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டால் மட்டுமே போட்டியிடும் வார்டுகளை இறுதி செய்து வேட்பாளர் பட்டியலை அறிவிக்க முடியும். 21 மாநகராட்சிகளிலும் முக்கிய வார்டுகளில் தகுதியான வேட்பாளர்களை களமிறக்க திமுக முயற்சி செய்து வருகிறது.

அதிமுக பாஜக இழுபறி

அதிமுக பாஜக இழுபறி

அதிமுக, பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சனிக்கிழமை சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது. நேற்றைய பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கும் இடையை சுமூக உடன்பாடு ஏற்படவில்லை இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையிலும், இரு கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

அதிமுக வேட்பாளர் பட்டியல்

அதிமுக வேட்பாளர் பட்டியல்

இந்தநிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவடைவதற்கு முன்னதாக அ.தி.மு.க முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுக சார்பில், கடலூர், விழுப்புரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதற்குக்காரணம் நல்ல நாள் என்றுதான் நேற்றே சில இடங்களுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அமாவாசை மரணயோகம்

அமாவாசை மரணயோகம்

இன்றைய தினம் தை அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்று மரணயோகம் இரவு வரை உள்ளதால் முக்கிய அரசியல் கட்சியினர் யாரும் இன்று வேட்புமனு தாக்கல் வாய்ப்பில்லை. அதே நேரத்தில் சாதாரண சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நல்ல நாள் நல்ல நேரம்

நல்ல நாள் நல்ல நேரம்

திமுக, அதிமுக ஆகிய கட்சி வேட்பாளர்கள் நாளை பிற்பகல் வரை அமாவாசை இருந்தாலும் பிரதமை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை. புதன்கிழமையன்று சந்திர தரிசனம் என்பதாலும் அரசியல் கட்சியினருக்கு புதன்கிழமை பிப்ரவரி 2ஆம் தேதி வளர்பிறை காலம் துவிதியை நல்ல நாள் என்பதாலும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

Recommended Video

    அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி.. பாஜக அறிவிப்பு
    வியாழக்கிழமை

    வியாழக்கிழமை

    அதே போல வியாழக்கிழமை வளர்பிறை திருதியை என்றாலும் மாலை வரை மரணயோகம் உள்ளது. அதே போல வெள்ளிக்கிழமை 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வெள்ளிக்கிழமை வளர்பிறை சதுர்த்தி திதி. பூரட்டாதி நட்சத்திரம் உள்ளதால் வேட்புமனு தாக்கல் செய்ய நல்ல நாளாகும். அன்றைய தினம் பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனு தக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+