"சேகர்பாபு கிட்ட பேசறியா.. பொம்பளையா நீ.. நாசமா போய்டுவ".. போலீஸை மிரட்டிய டிரைவர்.. அள்ளிய போலீஸ்
பெண் போலீஸை தரக்குறைவாக பேசிய ஆட்டோ டிரைவர் கைதானார்
சென்னை: "சேகர்பாபு கிட்ட பேசறியா?.. ஒரு பொம்பளை நீயே இப்படி பேசுறியா?.. நீ நாசமா போய்டுவ".. என்று ஆட்டோ டிரைவர் ஒருவர் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகாவை மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை சென்னையில் ஏற்படுத்தி வருகிறது.
இப்போது ஊரடங்கு அமலில் உள்ளது.. தொற்று இன்னும் முழுமையாக குறையாததால், ஓரளவு மட்டுமே தளர்வுகள் அமலில் உள்ளன.
அதனால் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் நம் போலீசார் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.. அப்படித்தான், சென்னை பாரிமுனையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்...

ஆட்டோ டிரைவர்
அப்பொழுது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது.. ஆட்டோவை அக்சர் அலி என்பவர் ஓட்டி வந்தார்.. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் மாற்றுத்திறனாளி என்பதும், மருத்துவ காரணங்களுக்காக வெளியில் செல்வதாகவும் சொன்னார்.. ஆனால், போலி இ-பதிவு பெற்றுக்கொண்டு ஆட்டோவில் சவாரியை ஏற்றி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கிருத்திகா
இதனால் அங்கு இருந்த, முத்தியால்பேட்டை பெண் சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா, அவர் மீது வழக்கு பதிவு செய்து, அந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தார்... இதை பார்த்ததும் அந்த ஆட்டோ டிரைவருக்கு கோபம் வந்துவிட்டது. அதெப்படி என் ஆட்டோவை பறிமுதல் செய்யலாம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு அந்த பெண் போலீஸ், நான் என் கடமையைதான் செய்தேன்" என்றார்..

ஆபாச பேச்சு
இதனால், பெண் போலீசை கெட்ட கெட்ட வார்த்தைகளிலும், மிகவும் தரைகுறைவாகவும் பேசியபடி அக்சர் அலி, என் ஆட்டோ சாவியை குடு.. ஒரு பொண்ணு நீயே இப்படி பேசுறியா? நீ நாசமா போய்டுவ.. இரு ஒரு நிமிஷம்" என்றவர் செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்தார்.

சேகர் பாபு
பிறகு இன்ஸ்பெக்டர் கிருத்திகாவிடம், "நான் இந்த ஏரியாவில் 40 வருஷமாக இருக்கேன்.. இங்கேதான் பிறந்து வளர்ந்தேன்.. சேகர்பாபு கிட்ட பேசிறியா? இந்த பேசு.. இங்கே கூட்டிட்டு வரட்டுமா" என்று தொடர்ந்து வாக்குவாதம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டார்.. இதனால், அங்கிருந்தோர் அக்சர் அலிக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் பிரச்சனையை விடுவதாக இல்லை.. இதையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக பெண் எஸ்ஐ கிருத்திகா போலீசில் புகார் செய்தார்.

கிருத்திகா
ஆட்டோ சாவியை அக்சர் அலி பிடித்திழுத்து காயத்தை ஏற்படுத்திவிட்டதாக அந்த புகாரில் கிருத்திகா தெரிவித்துள்ளார்.. மேலும், ஊரடங்கு தளர்வுகளை பயன்படுத்தி, போலியான காரணங்களை சொல்லி சிலர் இதுபோல் இ-பதிவு பெற்று வாகனங்களில் நடமாடுவதாவும் அப்புகாரில் மேலும் தெரிவித்திருந்தார்.

கைது
இதையடுத்து, எஸ்ஐ கிருத்திகாவை ஆபாசமாக பேசிய ஆட்டோ டிரைவர் அக்சர் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.. அவர் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உட்பட 5 பிரிவுகளின் கழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. பெண் போலீசை தரக்குறைவாக பேசி மிரட்டும் இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications